Saturday, February 4, 2017

மீட்டெடுக்கபடவேண்டிய பாரம்பரிய உணவுகள்

                                                                                                          -சாவித்திரிகண்ணன்

நம் முன்னோர்கள், பரம்பரைபரம்பரையாக எந்த உணவை உண்டு, உடல்திறன்பெற்று வாழ்ந்தார்களோ...., அந்த உணவைத் தான் பாரம்பரிய உணவுகள் என்றழைக்கிறோம். அன்று நம் முன்னோர்கள் உண்ட சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகளின் பெயர்களை சொன்னாலே இன்றுள்ள தலைமுறைக்கு தெரிவதில்லை.

சிறுதானியங்கள், ஆனால் பெரும் பலன்கள்!

சிறுதானியங்கள் அரிசியைக் காட்டிலும் அதிமுக்கியத்துவமானவையா?
ஆமாம். காரணம் அரிசியில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும், கொழுப்பும் அதிகம்.

அதனால் அரிசி அமிலத்தன்மை கொண்ட உணவாகும். ஆனால் சிறுதானியத்திலோ புரதம் அரிசியைக்காட்டிலும் இருமடங்காகும். நார்சத்தோ பல நூறுமடங்கு அதிகமாகும்.
மினரல்ஸ் எனப்படும் தாது உப்புகள், இரும்புசத்து, கால்சியம் போன்றவை அரிசியைக் காட்டிலும் பற்பல மடங்கு கூடுதலாகும்.
எனவே தான் குமரிமுனை தொடங்கி இமயம் வரை சிறுதானியம் பன்னெடுங்காலமாகப் பயிரிடப்படுகின்றன உலகில் 20க்கு மேற்பட்ட நாடுகளில் சிறுதானிய உற்பத்தி சிறப்பிடம் பெற்றுள்ளது. இதிலுள்ள கரையாத நார்சத்துகள் மலச்சிக்கலுக்கு மருந்தாகின்றன.

இதயத்தை அரண்செய்கின்றன.
பருவ வயதினருக்கு பலம் சேர்க்கின்றன.
மாதவிடாய் நின்ற நின்ற பெண்களுக்கு மகத்துவமாகின்றன
 நீரிழிவு நோயை நிருமூலமாக்குகின்றன.
புற்றுநோயை புறமிடவைக்கின்றன.
பித்தகற்களை சத்தமின்றி கரைக்கின்றன! அல்லது வராமலே தவிர்கின்றன.
மொத்தத்தில் சிறுதானியங்கள் ஆரோக்கியத்தின் திறவுகோலாகின்றன.

சிறுதானியங்கள் என்றால் அவை வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, பனிவரகு, சின்னசோளம் ஆகிய எட்டையும் குறிக்கும்.

 அரிசி, கோதுமை, மக்காசோளம்.... போன்றவற்றை நாம் பெருதானியங்கள் என்கிறோம்.

 நவதானியங்கள் என்பவை பச்சைபயிறு, கொண்டைக்கடலை, நிலக்கடலை, மொச்சை, கருப்பு உளுந்து,காராமணி, சோயாபீன்ஸ், கொள்ளு, பச்சை பட்டாணி போன்றவையாகும்.

அந்தந்த மண்ணில் பிறந்தவர்கள், எந்தெந்த இடத்தில் வாழ்ந்தாலும் பிறந்த மண்ணுக்குரிய உணவே அவர்கள் உடலுக்கும். உள்ளத்திற்கும் உகந்ததாகும். காற்றும், நெருப்பும், ஆகாயமும் உலகத்திற்கே பொதுவானவை.

ஆனால், நிலமும், நீரும் அந்தந்தச் சூழலுக்கு உகந்தவை. உணவென்பது நிலமும், நீரும் கலந்த கலவையே.

நம் முன்னோர்கள் காலத்தில் பணம், காசுக்கு மாற்றாக பண்டமாற்று என்றொரு வழக்கம் இருந்தது. இதனால் சமூகத்தின் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்டு ஒன்றைக் கொடுத்து, மற்றெல்லாவற்றையும் பெற்றனர்.

மூன்று கி.மீக்கு ஒரு விதை நெல் புழக்கத்திலிருக்கும். அரிசியும், சிறுதானியங்களும் நிலத்திற்கு நிலம் வேறுபட்டன.
அவை அனைத்தும் அந்தந்த நிலத்திற்குரிய மக்களால் பெயர்சூட்டப்பட்டன. யானைமுக்கன், கம்மன்சம்பா, காட்டுயாணம், மிளகுச்சம்பா, குள்ளக்கார், பெருங்கார்....
என ஆயிரத்திற்கும் மேலான விதவிதமான பெயர்களில் அரிசி ரகங்கள் இருந்தன.

இவை போன்றே சிறுதானியங்களிலும் நிறைய ரகங்கள் உள்ளன. தினை என்றால் நாற்பத்துக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன.

நமது கல்வியிலும், கலாச்சாரத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் அந்நிய ஆதிக்கம் நுழைந்ததைப் போலவே உணவிலும் அந்நிய ஆதிக்கம் படிப்படியாக நுழைந்தது.

உணவில் நுழைந்த அந்நிய ஆதிக்கம் எதிர்புகளின்றி ஏகபோக மாயிற்று.

விளைவு, பலசாலிகளாத் திகழ்ந்த தமிழ்ச்சமூகம் பலஹீன மடைந்துவிட்டது.

தன்மான சிங்கங்களாக சிலிர்த்து திரிந்த சமூகம் அற்பச் சுகங்களுக்காக அடிமை மனோபாவத்தில் ஆழ்ந்து திளைக்கிறது.

நாக்குச் சுவைக்காகவும், பார்வைப் பசிக்காகவும் நாம் அனுமதித்த உணவுகள்
நம் உடலை பலஹீனமாக்கி, உணர்ச்சிகளை மலடாக்கி, உள்ளத்தை வெறுமையாக்கி மொத்தத்தில் நம் நலத்தையும், குணத்தையும் மாற்றி விட்டன.

நாம் உண்ணும் உணவு தான் நம் உடலாகிறது.
 உதிரமாகிறது.
தசையாகிறது,
மஞ்ஜையாகிறது
என்பதெல்லாவற்றையும் விட அவையே நம் எண்ணங்களுக்கும், சிந்தனைக்கும், செயல்பாடுகளுக்கும் அடித்தளமாகின்றன.

இவற்றின் வழியே நம் அடையாளத்தை கட்டமைக்கின்றன. அந்த வகையில் நாம் நம் அடையாளத்தை இழந்துவிட்டோம்.

அன்று ஆண்களிடமிருந்த வீரம் இன்று என்னவாயிற்று? பெண்களிடமிருந்த நாணம் ஏன் நழுவிப் போயிற்று?
குழந்தை பருவத்திற்கேயுரிய 'இன்னாசென்ஸ்' தற்போது இல்லாமலாகிவருகிறது.
 பிஞ்சிலே பழுத்து, நஞ்சிலே துவைத்தெடுத்த நச்சு முத்துக்களாக இன்றைய இளம் சமூகத்தை வளர்த்தெடுக்கப் போகிறோமா?

தமிழனுக்கேயுரிய தன்மானமான உணர்வு குறைந்து வருகிறது. விருந்தினரை உபசரிக்கும் விருந்தோம்பல் எனும் அடிப்படை பண்புநலன் அருகிவருகிறது. பெரியாரைப்பணிதல், சிறியோரை அரவணைத்தல், சமூகநலனுக்காக கூடி உழைத்தல், பிறர்நலன்விழைதல், உழைத்து வாழ்வதில் உவகைகொள்ளுதல், பழிபாவத்திற்கு அஞ்சுவது, பொதுநலனில் ஈடுபாடு, தாய்மொழிபற்று, நாட்டுப்பற்று... என சென்ற தலைமுறைகளின் அடையாளங்களாகத் திகழ்நதவை யாவும் இப்போது உருக்குலைந்து வருகின்றன.

எல்லாவற்றுக்கும் உணவுக்கலாச்சாரம் உருக்குலைந்ததே அடிப்படையாகும்.

 புறநானுறு காவியத்தில் போரில் புறமுதுகிட்டு, முதுகில் ஈட்டிபாய்ந்து கிடந்த மகனைக் கண்ட அவன் தாய், அவனுக்கு பாலூட்டிய தன் முளையை வெட்டி எறிந்த நிகழ்வு உணர்த்தும் செய்தி என்ன? என் மார்பகத்து தாய்பால் இவனுக்கு வீரத்தை யல்லவா ஊட்டியிருக்க வேண்டும்? அன்றி இவன் கோழையாகிப் போனானென்றால் இவனுக்கு பாலூட்டிய என் குற்றமன்றோ அது? என்று அந்தத் தாய் சிந்தித்தன் விளைவாகத் தான் தன் மார்பகத்தை அறுத்தெறிந்தாள்! கேட்கவே சிலிர்க்கிறதல்லவா?

 நாட்டு மாட்டில் பால் குடித்து வளர்ந்த காலத்தில் நம் நரம்புகளில் தன் மான ரத்தம் ஓடியது.
சீமைமாட்டுப்பாலை, அதிலும் அதீத பாலுக்காக ஊசிபோட்டு கறக்கப்பட்டு, பின்பு பதப்படுத்தவென்று பலவிதங்களில் பாழ்பட்டு,
நாம் குடிக்கின்ற பாலில் வீரமா விளையும்?
இல்லை இது சோரத்திற்கே துணைபுரியும்.
பாலில் மட்டுமா?
நம் உணவே ஏறத்தாழ நம்மிடமிருந்து அபகரிக்கபட்டு விட்டதல்லவா?
சிலகாலத்திற்கு சிறுதானியங்களே வழுக்கொழிந்து போனது எப்படி நிகழ்ந்தது?
சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பெயர் குறிப்பிடப்படும் வரகும், திணையும் வழக்கொழிந்ததன் மாயம் என்ன?

தேனும், திணைமாவும் உண்டு, தினவெடுத்த தோளும், வாளும் கொண்டு போர்புரிந்த இனம் இன்று பம்மிீககிடப்பதென்ன? 'வரகரிச்சோறும் வழுதுணங்காய்வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும்.....'

என நம் ஔவைபாட்டி சுவைத்து எழுதிய உணவு தடம் மாறி காணாமலானதென்ன?

உடல்வலுப்பெற, உயிரணுக்கள் விருத்தியாக வேண்டுமென்றால், சாப்பிடவேண்டிய சம்பா அரிசிக்குப் பெயரே, மாப்பிள்ளை சம்பா என வைத்து, மலட்டுத் தன்மையற்ற சமூகத்தை மருந்துகளின்றி உணவின் வழியே புரந்த தமிழ்சமூகத்தின் உணவு கலாச்சாரம் என்னானது?

கருவுற்ற பெண் ஆரோக்கியமாக குழந்தையைப் பெற்றடுக்கவும், சுகப்பிரசவம் காணவும் வேண்டி கண்டெடுக்கப்பட்ட பூங்கார் அரிசியும், சுகப்பிரசவத்திற்குப் பின் தாய்ப்பால் சுரப்பிற்கென கொடுக்கப்பட்ட திணையரிசியும், கிச்சலிசம்பாவும், நிலச்சம்பாவும், குழிவெடிச்சான் அரிசியும் காணாமலாக்கப்பட்டு ஐ.ஆர்.எட்டு, ஐ.ஆர் இருபது, சூப்பர் பொன்னி... என ஏதேதோ பெயர்களில் ஓட்டுரகங்களும், வீரியவிதை அரிசி ரகங்களும் பட்டைதீட்டபட்டு, பளபளப்பாக பந்தி வைக்கப்பட்ட காலத்தின் கோலத்தை என்னென்பது?

 மூங்கில் அரிசியும், காட்டுயாணமும் நூறுவயதைக் கடந்த முதியோர்களைக் கூட மூட்டுவலிகளின்றி திண்ணென திகழச் செய்த அரிசி ரகங்களல்லவா?

அறுசுவைக்குள் ஆரோக்கியத்தை புதைத்து பேணிவந்த சமூகமல்லவா தமிழ்ச் சமூகம்!

பாகற்காய், கடுக்காய், கறிவேப்பிலை, வாழைப்பூ, மாம்பருப்பு, ஓமம், வெந்தயம் போன்றவை நம் உணவிலிருந்து விடுபட்ட காலத்திலிந்து தான் நீரிழிவு நோய் நீக்கமறப் பரவியது.

மைதா, வெள்ளைச் சீனி, டால்டா, ரீபைண்ட் ஆயில், பாலீஸ் செய்யப்பட்ட பாரம்பரியமில்லா அரிசி... இவற்றின் வருகைக்கு முன் உள்ள தமிழ்ச்சமூகம் எப்படி இருந்தது?

இவற்றின் வருகைக்கு பின் தமிழ்ச்சமூகம் எப்படி வீழ்ந்தது?
என்பதை குறித்த ஆய்வுகள் வருங்காலத்தில் ஆயிரமாயிரம் பக்கங்களுக்கு வரக்கூடும்.

இன்று எங்கெங்கு காணினும் பரோட்டா, நாண், பீட்சா, பர்க்கர், நூடுல்ஸ், ப்ப்ஸ், சமோச்சா, குளாப்ஜாமுன், பாதுஷா விதவிதமான கேக்குகள், பன்கள், ரொட்டிகள், சான்விட்ச்சுகள்... என எல்லாம் மைதா மயம்...!

 தமிழர்களின் தேசிய உணவாகிவிட்டதா மைதா?
மைதா என்பது உண்ணத்தகாத ஒரு கழிவு....

 கழிவிலிருந்து சமூகத்திற்கு பயன்படும் ஆக்கப் பொருளை உருவாக்கலாம்.
ஆனால் கழிவுகளிலிருந்து உணவு தயாராகலாமா?
கழிவுகளையே உணவுகளாக கருதி கொண்டாட்ட மனோபாவத்தில் திளைக்கும் சமூகம் கழிசடைச் சமூகமல்லவா?

மைதாவை மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஏன் தடை செய்துள்ளன......?

பென்சாயில் பெராக்சைடால், அயிலட்டசான் போன்ற ரசாயணக் கலவைகளின் விளைவல்லவா மைதா?

மலச்சிக்கல், நீரிழிவு, மூட்டுவலி, ரத்த அழுத்தம்.... என அனைத்து நோய்களுக்கும் ஆதார மூலமல்லவா மைதா?

தீண்டக் கூடாத குப்பைக்கழிவு தீஞ்சுவை உணவாகியுள்ளதே?

இதுபோல் மற்றொரு பெருந்தீமை வெள்ளைச்சீனி;
 இது ஒரு வெள்ளைவிஷம். இதில் தான் நாம் தமிழர்கள் பாயாசம் செய்து பரவசத்துடன் பருகுகிறார்கள்.

பாஸ்போரிக் ஆசிட், சல்பர்டை ஆக்சைட், காஸ்டிக் சோடா, வாஷிங்சோடா இந்தக் கலவையில் மனித எலும்புகளையும் கூட்டு சேர்த்து தயாரிக்கப்படும் வெண்மைவிஷம் தான் சீனி. இதில் தயாரிக்கப்படுவதற்கு பாயாசம் என்பதா?

 'பாய்சன்' என்பதா?
இது மட்டுமல்ல இன்றைக்கு பழச்சாறுகள் தொடங்கி காபி, டீ, பலகாரங்கள், பால்கோவா, லட்டு, ஜிலேபி, அல்வா.. . என அனைத்து இனிப்புகளும் வெள்ளை சீனியால் தான் செய்யப்படுகின்றன.
 ஒரு ஸ்பூன் சீனியானாலும் அது நம் உடம்பிலுள்ள கால்சியத்தை களவாடிவிடும்.

தினசரி சீனியை ஏதோ ஒரு வகையில் நாம் உட்கொண்டபடியே தான் இருக்கிறோம்.
அப்படி ஒவ்வொரு முறை உட்கொள்ளும் போதும் நம் உடம்பிலுள்ள கால்சியம் களவாடப் பட்டுக் கொண்டேதான் இருக்கும். பிறகு ஏன் மூட்டுவலி வராது.
சிலருக்கு சாதாரணமாக அடிபட்டாலே தற்போதெல்லாம் எலும்புகள் நொறுங்கிவிடுகின்றன. தடுமாறிக் கீழே விழுந்து எலும்பு முறிவு கொள்பவர்கள் ஏராளம்.
எல்லாம் வெள்ளைச் சீனியின் விபரீதங்களே! இது மட்டுமின்றி நீரிழிவு எனப்படும் சக்கரைவியாதி, சிறுநீரகநோய், ஜீரணக்கோளாறு, ஆண்மையின்மை என பல நோய்களை சீனி தோற்றுவிக்கும்.

 சீனி என்பது அடிப்படையில் ஒரு அமிலமாகும்.
எனவே உடம்பில் இது பித்தத்தை அதிகரிக்கும்.
பித்த அதிகரிப்பில் உண்டாகும் நோய்களுக்கெல்லாம் இது துணைபுரியும்.

ஐம்பது வருஷத்திற்கு முன்பு தமிழகத்தில் சீனி எத்தனை பேருக்குத் தெரியும்?

மிகச்சிறிய அளவே புழுகத்திலிருந்தது. சீமைச்சீனி என்பார்கள்.

பனைவெல்லம், தென்னைவெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுசர்க்கரை, மண்டைவெல்லம் இவை தாம் நாம் இனிப்புக்கு பயன்படுத்தியவை.

தேநீர், காபி, பாயாசம், பொங்கல், மிட்டாய், கும்மாயம், பணியாரம், அதிரசம், புட்டு, களி... என எல்லாவற்றிக்குமே நாம் கருப்பட்டியையும், மண்டைவெல்லத்தையும் அல்லவா பயன்படுத்திவந்தோம்.

 சக்கரைவியாதி என்பது அன்று மிகவும் ஆபூர்வம். அது பணக்காரர்களின் நோயாகத் தான் பார்க்கப்பட்டது.
இன்றோ சக்கரைவியாதி என்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அது ஒரு தேசிய நோயாக விஸ்வரூபமெடுத்துள்ளது.
காரணம் நாம் உண்ணும் பாரம்பரியம் தொலைத்த - பாலீஸ் செய்யப்பட்ட - அரிசி,
வெள்ளைச்சீனி, மைதா, டால்டா, ரீபைண்ட்ஆயில் மற்றும் செக்கில் ஆட்டாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவையே!

எனவே, 'பாஸ்ட்புட்' கலாச்சாரத்தை தொலைத்து
பாரம்பரிய கலாச்சாரத்தை நாடுவோம். 

விவசாயம் - நேற்று இன்று நாளை                                                                                                                -சாவித்திரிகண்ணன்

எங்கெங்கும் காணினும் பச்சைபசேல் பயிர்கள்....
நெற்கதிர்கள், சிறுதானியங்கள், ஊடுபயிர்கள்....
சத்துமிக்க காய்கறிகள், மணம்வீசும் பூக்கள்
வாழை, தென்னை, பனை, மா, பலா, கொய்யா.... என எண்ணற்ற பழ மரங்கள்...,
கிராமங்கள் தோறும் அரசமரம், ஆலமரம்,பூங்கன், வேம்பு, வாகை, முருங்கை...செழிதோங்கிய மரங்கள்!
கால்நடைகள் இல்லாத விவசாயி வீட்டை பார்க்க முடியாது.

மண் என்றால் செம்மண்,கரிசல்மண்.வண்டல்மண்,களிமண்..என்பது பொது புரிதல்
ஆனால்,மண்ணை அதன் இயற்கை சூழல் சார்ந்து
குறிஞ்சி(மலை),முல்லை(காடு),மருதம்(நாடு),நெய்தல்(கடல்),பாலை(வற்ட்சி பகுதி) என பகுத்து அந்தந்த மண்ணுகுரிய பயிர் செய்து வாழ்ந்தவன் தமிழன்.
'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என
ஆனை கட்டிப் போரடித்ததது' தமிழ் மண்!
விவசாய தொழில் நுட்பத்தில், வேளாண்துறை சார்ந்த பட்டறிவில் உலகத்திற்கே முன்னோடியாகத் திகழ்ந்த பூமி தமிழகம் !

வேட்டைச் சமூகமாகத் திரிந்த மனிதகுலம் நிலவுடைமைச் சமுதாயத்திற்கு மாறியதிலிருந்து சுமார் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக தாவரப்பயிர்கள் குறித்த தன்நிகரற்ற நுண்ணறிவைக் கொண்டது நம் தமிழ்ச்சமூகம்!

நம் உழவுக்கு பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ளது.

உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுதுஉண்டு பின் செல் பவர்.
என உழவை முதன்மை படுத்திய சமூகம்

விவசாயம் என்பது ஏதோ பிழைப்பதற்கான தொழிலல்ல!
அது வாழ்வின் ஒரு அங்கம்! மிகப்புனிதமானது!

தமிழனின் வாழ்வியல் அறநெறிகளோடு பின்னிப் பிணைந்தது

இங்கே விதைப்பது தொடங்கி அறுவடை வரை அனைத்துமே புனிதமான சடங்குகளாக கொண்டாடப்பட்டன.

குழந்தைக்கு முதன் முதலாக சோறுட்டுவதே சோறு தித்துதல் என்ற கொண்டாட்டமானது!

ஐயாயிரம் வகை நெல்ரகங்கள் கதிராடிச் செழித்தோங்கிய பூமி வேறெங்காவது உண்டா?

ஒவ்வொரு அரிசிக்கும் ஒரு தனிச்சுவை, தனி மருத்துவ குணம்!

ஆண்டவனுக்கு நிகராக அரிசியை கொண்டாடியவன் தமிழன்

பசியால் துடித்தாலும் அவன் விதைநெல்லை சாப்பிடமாட்டான்! அது அடுத்த உழவுக்கானது! அடுத்தடுத்த தலைமுறைக்கானது என்பதை ஆணித்தரமாக நம்பினான்!

வறட்சி, வெள்ளம், இயற்கை சீற்றத்தில் தான் அழிந்தாலும், விதை நெல்லை அழியவிடக்கூடாது என அவற்றை ஆலயங்களின் கோபுரக் கலசங்களில் சேகரித்து வைத்தனர் நம் முன்னோர்.!

வெள்ளத்தை சமாளிக்க மடுமுழங்கி சம்பா, உவர்நிலத்திற்கு உவர் சம்பா, புஞ்சை நிலமென்றால் சிறுதானியங்கள்.... என இயற்கையின் இயல்பிற்கேற்ப பட்டறிவால் பயிர்களை பயிரிட்டது தமிழ்ச்சமூகம்.

இன்று வரை இந்த பூமியின் நிலப்பரப்பில் காணப்படும் தாவரங்களில் 15,000 வகையினங்கள் வரையிலுமே அதன் மருத்துவ பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால், நம் தமிழ்மண்கண்ட சித்தர்களோ பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே 8,700வகை தாவரங்களின் மருத்துவகுணங்கள், அவற்றை பண்படுத்தி பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றை கூறிச்சென்றுள்ளனர்!
நீர் மேலாண்மைககு ஒரு நிகரற்ற சான்றாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட கல்லணை! கட்டியவன் கரிகாழச்சோழன் எனும் தமிழன்!
ஆனால், அப்படிப்பட்ட பெருமை படைத்திருந்த இன்று நம் தமிழ்நாட்டிற்கு என்னாயிற்று?

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதொர் வைகை பொருணைநதி - என
மேவிய ஆறு பல ஓடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று பரவசத்துடன் பாரதி பாடிவியந்ததெல்லாம் கனவா? பழங்கதையா?
நாள்தோறும் விவசாயிகளின் தற்கொலைகள்.....
நகரங்கள் தோறும் புகழிடம் தேடும் விவசாயிக் கூலிகள்,
வெறிச்சோடிய வயல்வெளிகள்,
விரிவாக்கமடைந்து கொண்டிருக்கும் நகர்புறங்கள்,
கான்கிரிட் காடுகளாகும் விளைநிலங்கள்,
வற்றிப் போன ஆறுகள்,
ஆலைக்கழிவுகளால் அலங்கோலமான ஆற்றுப்படுகைகள்,
மறுபுறம் சூறையாடப்பட்ட ஆற்றோர மணற்பரப்புகள்.... ௨
தோண்டிப் பார்த்தும் நீர் எடுக்க முடியாமல்
துளைபோட்டு நீர் எடுத்து சக்கையாக உறிஞ்சி
சல்லடையாக்கப்பட்ட நிலத்தடி நீர்வளம்.

ஏன் இந்த நிலைமை?

'சுழன்றும் ஏர் பின்னது உலகம்'
என்ற பொய்யாமொழிப் புலவனின் வார்த்தை பொய்யாகுமா?

இல்லை, இது தற்காலிகப் பின்னடைவே!

ஆனால், நம் வீழ்ச்சியின் விபரிதத்தைத்தை உணர்ந்தால் தான் நாம் எழுச்சிக்கான பாதை புலப்படும்.

நமது தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 325லட்சம் ஏக்கராகும்.

இதில் 17 முக்கிய ஆற்றுப்படுகைகள்,61நீர்தேக்கங்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலப்பரப்பு சுமார் 80லட்சம் ஏக்கர் தான்!

அதே சமயம் கிணறு, ஏரி, குளம் மூலம் மழைநீரை சேகரித்து விவசாயம் செய்ய முடிந்த நிலப்பரப்பு சுமார் 90லட்சம் ஏக்கர்களாகும்!
இப்படியாக விவசாயத்திற்கான விளைநிலங்கள் 180லட்சம் ஏக்கர்களாக இருந்தது - 40ஆண்டுகளுக்கு முன்பு வரை!

ஆனால், இது படிப்படியாகக் குறைந்து தற்போது சுமார் 50லட்சம் ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடக்கின்றது.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
காவேரியை கர்நாடகம் சிறைபிடித்தது.
பாலாற்றை ஆந்திரா பதுக்க முயற்சிக்கிறது
முல்லை பெரியாரை கேரளா முழங்கிய வண்ணமுள்ளது
என்றாலும் கூட நீர்மேலாண்மை இங்கு நீர்மூலமாக்கப்பட்டது ஒரு பிரதான காரணமாகும்!

ஆண்டுக்கு சராசரியாக தமிழ்மண்ணில் 950மி.மி மழைபெய்கிறது.
நம் மண்ணில் முன்னோர்கள் சுமார் 49,000 ஏரி குளங்களை உருவாக்கி தந்தனர்.
இவற்றில் பெருமளவை நாம் தொலைத்துவிட்டோம் 7கி.மீ வரை நீண்டிருந்த ஏரிகெளல்லாம் எங்கே போனதென்றே தெரியாமல் அடுக்குமாடிக்கட்டிடங்களாக ஆக்கிரமித்துவிட்டோம்.
மண்மேடிட்ட ஏரி குளங்களை நமக்கு தூர்வாரத்துப்பின்றி வாழ்கிறோம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேட்டூர் அணைக்குள் மூன்றில் ஒரு பங்கு மணலால் மூடப்பட்டு, அதனால் தண்ணீர் சேதாரமாவது பற்றி சிந்திக்காமல் அரசியல் செய்கிறோம்.

நம் பக்கத்து மாநிலங்கள் நூற்றுக்கணக்கில் கதவணைகள், தடுப்பணைகள், சிற்றணைகள் கட்டி நமக்கு சேரவேண்டிய தண்ணீரை பிடித்து வைக்கின்றன.
ஆனால் நாமோ கிடைக்கும் மழைநீரில் சரிபாதியை கடலுக்கு தாரை வார்க்கிறோம்.

கர்நாடகத்துடன் காவேரி நீருக்காக சண்டையிட்டுக் கொண்டே ஆண்டுதோறும் சராசரியாக 90டி.எம்.சி தண்ணீரை கடலுக்கு அரிபணிக்கிறோம்

விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கைகொடுத்த காரணத்தால் நிலத்தின் நீர்வளத்தை ஆயிரம் அடிக்கு மேலாக போர்போட்டு துளைத்து சூறையாடி வருகிறோம்!
1950ல் அன்றைய விரிந்து பரந்த மதராஸ் மாநிலத்தில் இருந்த போர்பம்புகள் 14000 தான்1

ஆனால் இன்றோ சுருங்கிப் போன தமிழகத்தில் 20லட்சம் பம்புசெட்டுகள் இந்த நிலத்தை சல்லடையாக்கி நீரை உறிஞ்சி வருகின்றன!

1960களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைபுரட்சி விவசாயத்தின் அறக்கோட்பாடுகளையெல்லாம் ஆழப்புதைத்தது.
அதன் விளைவு நமக்கு உணவிட்ட அன்னை பூமியில் அதிக விளைச்சலுக்காக அளவில்லாமல் ரசாயன உரங்களை கொட்டி அணுஅணுவாக அதன் வளத்தை சாகடித்தோம்!

இயற்கை விவசாய பயிர்விளைச்சலில் நுனிமட்டுமே வீட்டுக்கு கிடைத்தது. நடுப்பகுதி தீவினமாக மாட்டுக்குவைக்கோலானது.

ஆக விளைச்சலில் ஒரு பங்கு தானியமாக மனிதனுக்கென்றால் இருபங்கு மாட்டுக்கானது. பால் நமக்கு உணவானது. அதன் சாணமும், மூத்திரமும் நிலத்திற்கு ஊட்டசத்து மிக்க உணவானது. பசுமைபுரட்சியில் தானியம் இருமடங்கு வைக்கோல் ஒரு பங்குமாக மாறியது. இதனால் கால்நடைச் செல்வங்கள் காணமலானது, மண்மலடானது, விளைந்த தானியங்களோ மனிதர்களை நோயாளிகளாக்கியது.

சுமார் அரை நூற்றாண்டு பசுமைபுரட்சியின் கசப்பு அனுபவங்கள் நம்மை பாரம்பரியவிவசாயத்தை நோக்கி பயணித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை நமக்கு நிர்பந்தித்துள்ளது.

இப்போதைய நிலை அப்படியே தொடருமானால் இன்னும் ஒரிரு தசாப்தங்களில் உலக மக்கள் தொகையில் 25 சதவிகிதத்தனருக்கு மட்டுமே உணவு கிடைக்கும் என ஐ.நாவின் அங்கமானதும், ஆப்ரிக்க ஐரோப்பிய நாடுகளின் பல்கலை அங்கமானதுமான 'கானா இயற்கை வளங்கள் நிறுவனம்' எச்சரித்துள்ளது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே செயற்கை விவசாயம் முளைவிட்டபோதே அன்று கடுமையாக எதிர்த்தவர் சர்.ஆர்பர்ட்ஹார்வார்டு. இயற்கைக்கு இணைந்த வேளாண்மையே மனிதகுலத்திற்கு உகந்தது என்றார். இதைத்தான் ஜப்பானின் மசனோபுஃபுகோகாவும் வலியுறுத்தினார்.

இயற்கை விவசாயத்திற்கான குரல்கள் இந்தியாவிலும் எதிரொலித்தது. மகாராஷ்டிராவில் பாஸ்கர் ஹிராஜிசாவே, நரேந்திர தபோல்கர், சுபாஷ் பாலேக்கர் போன்றவர்கள் எடுத்த பகீரத முயற்சிகளாலும், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ நம்மாழ்வாரின் அயராத பேருழைப்பும் நமக்கு ஓரளவு நம்பிக்கையை துளிர்க்க வைத்துள்ளது.

காணாமல் மறைந்துபோன பல்லாயிர கணக்கான அரிய பாரம்பரிய நெல் ரகங்களில் 600 வகை நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று தமிழகத்தில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு திரும்பியுள்ளனர்.
இயற்கை விவசாயத்தில் நல்லவிளைச்சலும், லாபமும் உள்ளது என்பதன் அத்தாட்சியாக இன்று நகரங்களெங்கும் முளைத்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இயற்கை அங்காடிகள் திகழ்கின்றன.

நகர்புறத்தில் படித்து தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிய மென் பொறியாளர்களான இளைஞர்களும், பல்வேறு துறை சார்ந்த இளைஞர்களும் தற்போது கிராமங்களில் ஆங்காங்கே தங்கள் சக்திகேற்ப நிலங்கள் வாங்கி விவசாயத்தில் அர்பணிப்போடு ஈடுபடுகின்ற ஆச்சிரியத்தை கடந்த 10 ஆண்டுகளாக பார்க்க முடிகிறது!

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் வழிகாட்டிகளாகவும் தஞ்சை கோ.சித்தர், கொடுமுடி டாக்டரும், பஞ்சகவ்ய சித்தருமான நடராஜன், நெல்ஜெயராமன், நாகர்கோவில் இரா. பொன்னம்பலம், பரமக்குடி முனைவர்.பி.துரைசிங்கம், அரச்சலூர் செல்வம், உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம், திண்டுக்கல் காந்திகிராமிய பல்கலைக்கழகம், கரூர் மாவட்ட வானகம்,புதுச்சேரியின் பூர்வீகம் அறக்கட்டளை, புதுக்கோட்டையின் ரோஸ் தொண்டு நிறுவனம், குடும்பம்..... போன்ற எண்ணற்ற ஆளுமைகளும், நிறுவனங்களும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் போரில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க முடியுமா? நோயற்ற ஆரோக்கியமான உணவுகான விளைச்சலை பெருக்கமுடியுமா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணமுள்ளன.
இது நீண்ட நெடிய போராட்டம்தான்! காலம் தான் இதற்கு விடை சொல்லும். அந்த மகத்தான காலக்கட்டத்திற்கு கைகொடுக்கும் முயற்சியாகத்தான் நாம் இந்த தொடரில் நேற்றைய விவசாயத்தின் நிலை, இன்றுள்ள சிக்கல்கள், நாளை நாம் சென்றடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை பற்றி அலச உள்ளோம்.


நன்றி: குமுதம் மண்வாசனை, பிப்ரவரி 1 

ஆஸ்த்துமாவை அஸ்த்தமிக்க செய்வோம்

   தேவாமிர்தம்சாவித்திரிகண்ணன்.


-  

சுவாசம்என்பதுசுகமாகநடந்தால்அதுநலமானஉடம்பாகும்.அந்தசுவாசமேசுமையாகிப்போனால்அதுநரகமானவாழ்வாகும்!
அதைத்தான்ஆஸ்த்துமாஎன்றழைக்கிறார்கள்!  ஆஸ்த்துமாவந்தவர்கள்அடையும்அவஸ்த்தைஅதைப்பார்ப்பவர்களையும்பதைபதைக்கவைக்கும்!
இப்படியாகஆஸ்த்துமாவில்அவதிப்படுபவர்கள்இந்தியாவில்இரண்டுகோடிபேர்என்பதுஅதிகாரபூர்வதகவல்! ஆனால்இந்தஎண்ணிக்கைஇரண்டுமடங்கிற்கும்அதிகமாகவேஇருக்கலாம்!
காரணம்ஆஸ்த்துமாவருவதற்கானசுற்றுச்சூழல்கேடுஇந்தியாவில்இங்கிங்கெனாதபடிஎங்கும்வியாபித்திருப்பதால்வியாதிஸ்தர்களும்விருத்தியாகிக்கொண்டேஉள்ளனர்.
குப்பைக்கூளங்கள், சாக்கடைநாற்றம், வாகனப்புகை, தொழிற்சாலைப்புகை, ரசாயனமருந்து, பூச்சிக்கொல்லிமருந்துகளின்நெடி, காற்றோட்டமில்லாவீடுகள், அதீதவெப்பம், அதீதக்குளிர், புகைப்பிடிக்கும்பழக்கம், பான்பராக், குட்கா, மதுப்பழக்கங்கள்ஆஸ்த்துமாவிற்குஅடித்தளமிடுகின்றன.!
மனதைசமநிலையில்வைக்கஇயலாமல்எடுத்ததற்கெல்லாம்உணர்ச்சிவசப்படுபவர்களுக்குகுறிப்பாககோபம், பயம், படபடப்பு, கவலை, அதிர்ச்சிபோன்றஉணர்ச்சிகள்மிகுந்திருப்பவர்களுக்குசுவாசம்சீராகஇல்லாமலாகிவிடுவதுஇயல்பே.
வலிநிவாரணமாத்திரைகள், ஆஸ்பரின்போன்றவற்றைஅதிகமாகஉட்கொண்டதால்ஆஸ்த்துமாவிற்குஆட்பட்டவர்களும்உண்டு.
அடிக்கடிஇருமல், சளி, தொடர்தும்மல், மூக்கடைப்பு, மூக்குஒழுகல்உள்ளகுழந்தைகளைஉடனேகவனிக்காவிட்டால்ஆஸ்த்துமாஅவர்களைஅரவணைத்துக்கொள்ளும்.
பரம்பரையாகஆஸ்த்துமாதாக்குவதும், உணவுஒவ்வாமையால்ஆஸ்த்துமாவிற்குஆட்படுவதும்மற்றொருவகையாகும்!
எப்படிநமக்குஆஸ்த்துமாவந்தாலும்அதைஇயற்கைவாழ்வியல்மூலம்இல்லாதொழிக்கமுடியும்.
ஆனால், ஆங்கிலமருத்துவத்தில்ஆயுள்முடியும்வரைமருந்துமாத்திரைகளைஉட்கொண்டுஆஸ்த்துமாவைகட்டுப்படுத்துகிறேன்என்றுமுயற்சித்துகலங்கித்தவிப்பதுதான்நடைமுறையாகவுள்ளது.
மற்றபலவியாதிஸ்தர்களைவிடஆஸ்த்துமாநோயாளிகள்அனுபவிக்கமுடியாதஉணவுகளின்பட்டியல்நீளமானது!  ஆனால், அதேசமயம்இயற்கைவாழ்வியலோடுஇரண்டறக்கலந்துவாழமுடிந்தவர்கள்ஆஸ்த்துமாவைஅஸ்தமிக்கவைக்கவும், அர்த்தமுள்ளஒருவாழ்க்கையைஅனுபவிக்கவும்முடியும்.முதலில்ஆஸ்த்துமாவந்துவிட்டதால்கொதிநீரில்தான்குளிக்கவேண்டும்என்றமூடநம்பிக்கையிலிருந்துவெளியேறுபவர்கள்தான்முழுநிவாரணத்திற்கானமுதல்படியில்கால்வைப்பவர்களாவர்.அதிகாலையும், மாலையும்பச்சைத்தண்ணீர்குளியலானதுபஞ்சபூதசக்திகளில்ஒன்றானநீர்சக்தியின்ஆற்றலைநமக்குள்நிறைத்துக்கொள்வதாகும்.குளித்தபிறகுதலையைஈரமில்லாமல்நன்குதுவட்டவேண்டியதுஅவசியம்.
பிறகுசூரியநமஸ்காரஆசனத்தை 10 முறையேனும்செய்யவேண்டும்.பிறகுபிராணாயமங்களைகுறைந்தது 30 நிமிடங்கள்செய்யவேண்டும்.அத்துடன்தினசரி 2 முறை 10 முதல் 15 நிமிடங்கள்தியானம்செய்யவேண்டும்.
இவைநம்சுவாசத்தைஒழுங்குபடுத்துவதோடு, ஆக்சிஜன்மூலமாகநம்உடல்பெறவேண்டியஆற்றல்களைமுழுமையாகப்பெற்றுத்தரும்.எவ்வளவுக்குஎவ்வளவுமனிதன்நிதானமாகவும், ஆழ்ந்தும்மூச்சுஇழுத்துவிடுகின்றானோஅவ்வளவுக்குஆரோக்கியமாகத்திகழ்வான்!
நம்மில்பலர்ஆழ்ந்துசுவாசிப்பதில்லை.ஒவ்வொருசுவாசத்திலும்நாம்உள்ளிழுக்கும்காற்றின்அளவுகுறைந்தது 500 மில்லியாவதுஇருக்கவேண்டும்.நல்லஆரோக்கியமானமனிதன்ஒருநிமிடத்திற்கு 15 முதல் 18 தடவைசுவாசிக்கிறான்.
ஆனால்பிராணாயாமம், யோகா, தியானம், முதலியவற்றில்பயிற்சிஉள்ளவர்களின்சுவாசத்தின்எண்ணிக்கைஇன்னும்குறைவாகஇருக்கும்.சுவாசத்தின்எண்ணிக்கைகுறையக்குறையஆயுள்அதிகரிக்கும்! நிமிடத்திற்கு 38 முறைமூச்சிழுத்துவிடும்முயலின்ஆயுள் 8 ஆண்டுகளே! ஆனால், நிமிடத்திற்கு 5 முறைமூச்சிழுக்கும்ஆமையின்ஆயுள் 155 ஆண்டுகளாகும்!
பிரணாயாமத்தால்உடலின்இயங்குசக்திஅதிகரிப்பதோடுகாற்றுமண்டலத்தின்காந்தசக்திநம்முள்கலக்கிறது.நம்மூக்கில்சுமார் 6 கோடிநுகர்நரம்புசெல்களைஆண்டவன்சிருஷ்டித்துள்ளான்.அவற்றின்ஆற்றல்அளப்பரியது.ஆனால், அவற்றைஉணராமலேயேஅனேகரின்ஆயுள்முடிந்துவிடுகிறது.
நமதுமூக்கிற்குதேவைதூயகாற்றுமட்டும்தான்! விதவிதமானவாசனைகளால்அதுவலுப்பெறுவதில்லை.எனவேவாசனைதிரவியங்கள்அவசியமில்லை.நாக்குசுவைக்காகநாளெல்லாம்அலைந்துதேடித்தின்றுசுகமடையும்நாம்மூக்கின்ஆழ்ந்தசுவாசத்திற்காகஒருநாளில்அரைமணிநேரம்செலவழிக்கக்கூடாதா?
ஆஸ்த்துமாநோயாளிகள்தூங்கும்நேரம்தவிரபடுக்கையைத்தவிர்க்கவும்! ஓய்வுஎன்பதுஉட்கார்ந்தநிலையில்அமைவதுநல்லது.காரணம்படுத்தநிலையில்எப்போதும்நம்சுவாசம்பாதிஅளவில்தான்நடக்கும்.ஆனால்உட்கார்ந்தநிலையிலோமுழுமையாகநடக்கிறது.
சரி, இனிஉணவுக்குவருவோம்.
ஆஸ்த்துமாவிற்குஅறவேதவிர்க்கவேண்டியவை;
பால், தயிர், நிலக்கடலை, கடலைமிட்டாய், பொறித்தமற்றும்வறுத்தஉணவுகள், செரிமானத்தைசிரமமாக்கும்அதீதபுரதம், கொழுப்புமற்றும்கார்போஹைட்ரேட்அதிகமுள்ளஉணவுகள், முட்டைஉள்ளிட்டமாமிசஉணவுகள், வெள்ளைச்சீனி, டால்டா, ரீபைன்ட்ஆயில், அவரைக்காய், உருளைக்கிழக்கு, பீன்ஸ், பீட்ரூட், செவ்வாழை, நாட்டுப்பழம்தவிரஅனைத்துவாழைப்பழங்களையும்தவிர்க்கவும், கருணைக்கிழங்கைதவிரஅனைத்துகிழங்குகளையும்தவிர்க்கவும். கேக், சாக்லேட், பிரட், பிஸ்கட்உள்ளிட்டஅனைத்துபேக்கரிஅயிட்டங்களையும்தவிர்க்கவும்! பழங்களில்செரிமானத்திற்குசிரமம்தரும்பலாப்பழத்தைதவிர்க்கவும், புளிப்புத்தன்மையுள்ளஆரஞ்சு, திராட்சைபழங்கள்ஆகாது.
சாப்பிடவேண்டியஉணவுகள்;
குதிரைவாலி, சாமை, காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, பூண்டு, பாகற்காய், முட்டைக்கோஸ், வாழைக்காய், பச்சைசுண்டைக்காய், வெண்டைக்காய், நெல்லிக்காய், நாட்டுகொய்யா, கொருக்காய்புள்ளி, முந்திரிப்பழம், இலந்தைப்பழம், பப்பாளி, புளிப்பில்லாதஆரஞ்சு, சாத்துகுடி, அன்னாசி, தூதுவளை, முசுமுசுக்கை, முருக்கைக்கீரை, கல்யாணமுருங்கை, கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கன்னி, அகத்திக்கீரை, மணத்தக்காளி, கொத்தமல்லி, புதினா, தேன்… இவைஆஸ்த்துமாவைகாணாமலாக்கும்கண்கண்டஉணவாகியமருந்துகளாகும்!
இளஞ்சுடானதண்ணீரைஅடிக்கடிபருகலாம்.அதில்துளசிஇலைகளைபோட்டுகுடிக்கலாம்.கரிசலாங்கண்ணியைஅரைத்துதண்ணீரில்கொதிக்கவிட்டுசிறிதுபனைவெல்லம்சேர்த்துபருகுவதுநல்லபலனளிக்கும்.
அரிசிமற்றும்கோதுமைஉணவுகளைமிகஅளவோடுஎடுத்துக்கொள்ளலாம்.பொதுவாகவயிறுமுட்டஎப்போதுமேசாப்பிடக்கூடாதுஎன்பதைமனதில்ஆழமாகப்பதிவுசெய்துகொள்ளவும்.அரிசிமற்றும்கோதுமைஉணவுகளைமிகஅளவோடுஎடுத்துக்கொள்ளலாம்.பொதுவாகவயிறுமுட்டஎப்போதுமேசாப்பிடக்கூடாதுஎன்பதைமனதில்ஆழமாகப்பதிவுசெய்துகொள்ளவும்.அடிக்கடிசிறுஅளவில்உண்ணாவிரதம்இருப்பதும், ஆகமட்டும்இயற்கையானசமைக்காதஉணவுகளைசாப்பிடுவதும்மிகநல்லபலனைத்தரும்!
எலுமிச்சைப்பழத்தைஇளஞ்சூடானதண்ணீரில்பிழிந்து, சிறிதுதேன்சேர்த்துஉட்கொள்ளலாம்.லவங்கபட்டைதேநீர்சாப்பிடலாம்.மிளகுரசம், பூண்டுக்குழம்பு, சிவப்பரிசிஅவல், குதிரைவாலி, சாமையில்சோறுஅல்லதுகஞ்சிசாப்பிடலாம்!
வெற்றிலையில்காம்பைக்கிள்ளிஎறிந்துவிட்டுமிளகுத்தூள்சிறிதுசேர்த்துசாப்பிடலாம்.ஆஸ்த்துமாகாரர்கள்அனைத்துசோப்புகளையும், ஷாம்புகளையும், வாசனைதிரவியங்களையும்தவிர்த்து, நலங்குமாவு, மஞ்சள்சேர்த்தகுளியல்பொடிகளைபயன்படுத்தவேண்டும்.பொதுவாகஅனைவருக்குமேஇதுநல்லதாகும்!

ஆஸ்த்துமாவந்தால்ஆயுள்முழுக்கஅவதிக்குள்ளாவதுஎன்பதுஎழுதப்படாதவிதியாகவுள்ளது.ஆனால்ஆஸ்த்துமாவைஅறவேஒழிக்கமுடியும்என்பதுஇயற்கைவாழ்வியல்சார்ந்தஅறக்கோட்பாடுகளால்அனுபவபூர்வமாகநிரூபணமாகியுள்ளது.ஆயிரக்கணக்கானவர்கள்இதற்குஅத்தாட்சியாகும்! 

நன்றி: ரௌத்திரம்.