சாவித்திரிகண்ணன்
உலகின் முதல் மனிதனான ஆதம்சும்,ஏவாளும், இலங்கையில் உளள ஈடன் தோட்டத்தில் தான் வாழ்ந்தார்களாம்.அப்போது கடவுள் 'வேண்டாம்-பறித்துவிடாதீர்கள்' என்ற கனியை அவர் பறித்து புசித்தார் என்பதெல்லாம் காலங்காலமாக சொல்லப்பட்டுவரும் கதையாகும். அந்த ஆதம்ஸ் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்னும்இலங்கைத் தீவில் காணக்கிடைக்கின்றன. ஒரு சமயம் ஆதம்ஸ் இலங்கையிலிருந்து தென்னிந்தியாவிற்கு கடல் மார்க்கமாக கால்களால் நடந்துவந்த பாதையே கடலடி மணற்திட்டுகளால் ஆனபாதையே இன்று விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலான இந்த நம்பிக்கையை கருத்தில் கொண்டே உலக அளவில் அந்த மணல் திட்டுகள் இதுவரை ஆதம்ஸ்பாலம் என அறியப்பட்டு வந்துள்ளது. எந்த நாட்டு உலகவரைபடத்திலும் அது ஆதம்ஸ்பாலம் அன்றே எழுதப்பட்டுளளது. ஆக, உலகின் கிறிஸ்த்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பொதுவாணவர்தான் ஆதாம். கிறிஸ்த்துவர்களின் பைபிள் படியும், இஸ்லாமியர்களின் குரான்படியும் ஆதாம் தான் கடவுள் சிருஷ்டியின் முதல் மனிதன். மூலபுருஷன். ஆனால் இதுவரை இதற்கு அவர்கள் உரிமை கொண்டாடவோ, புனிதம் கற்பிககவோ புறப்படவில்லை... என்பது ஒரு புறமிருக்க, இநத 30கி.மீ நீளமுளள கடலடிமணற்திட்டானது தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையில் இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கும் ஒரு இயற்கையின் அம்சமாக இருந்துளளது என்பது மறுகக முடியாத உண்மை, ஆங்காங்கே கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் இநத மணற்திட்டின் மேல், மேலும் கற்களைக் கொட்டி பாதை அமைக்கும் முயற்சிகள் இராமர் காலத்தில் நடந்திருக்க கூடும் என்று யூகிப்பவர்களும் இருக்கிறார்கள்.
1 comment:
Hi,
This is yogesh,i am not a regular blogger but I would like to point u to the article in Kumudham 14.11.2007 regarding the tehelka sting in Gujarat.In that article you have mentioned about Nathuram Godse.You have said that Godse tatooed the name 'Ismayil' is his hands so as to fake his identification to that of a Muslim.You also stated thatit was Nehru who showed the truth to the world.There is no evidence for your allegation.Please point to any evidence if available to prove your statement.
Post a Comment