Friday, August 30, 2013

சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றம்



இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்ட வடிவம் டாக்டர்.அம்பேத்கார் தலைமையில் முழுமை பெற்ற பின்பு முதன் முதலாக நடந்த கூட்டம் (மே-13-1952 ந் தேதி) பாராளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.

ஏனெனில் அதுவரை பிரிட்டிஷ் அரசியல் சட்டப்படியே நம் இந்திய ஆட்சி நடத்தப்பட்டு வந்தது. ஆகவே இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் கூட்டத்தையே இந்திய பாராளுமன்ற அமைப்பு உருவாக்கப்பட்ட காலகட்டமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையிலேயே வருகிற 13ந் தேதி இந்திய பாராளுமன்றத்தின் 60ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு மத்திய அரசு ரூ,5, ரூ .10க்கு சிறப்பு நாணயங்களையும்,
புதிய தபால்தலைகளையும் வெளியிடுகிறது.
ஜனவரி- 26-1950 முதல் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. முதன்முதல் பாராளுமன்ற தேர்தல் 1951-52 என நீண்டகாலகட்டம் எடுத்து, பலகட்ட ஓட்டுப்பதிவு நடத்தி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசாங்கம் பதவியேற்றது ஏப்ரல் 1952. ஆகவே அந்த அடிப்படையில் பார்த்தாலும் இவ்வாண்டை நாம் இந்தியப்பாராளுமன்றத்தின் 60தாவது ஆண்டு என்று கூறலாம்.

நமது பாராளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. இந்த உறுப்பினர்கள் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவை தவிர 2 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஆங்கிலோ-இந்தியர்கள் (தற்போது நமது பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினர் உட்பட 540 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதுதவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ராஜ்யசபை உறுப்பினர்கள். இவர்களின் எண்ணிக்கை 245. இவர்களில் 12 பேரை பல்வேறு துறையில் தலைசிறந்து விளங்குபவர்களை  கௌரவப்படுத்தும் விதமாக ஜனாதிபதி நியமிப்பார். ராஜ்யசபை நிறுவப்பட்ட ஆண்டும் 1952 தான். அந்த வகையிலும் இந்த 60வது ஆண்டு தினம் அர்த்தமுள்ளதாகிறது.

ஒரு சுவையான செய்தி என்னவென்றால் பிரிட்டிஷார் இதை சிஷீuஸீநீவீறீ பிஷீusமீ என்றே அழைத்தனர். அந்த வகையில் நமது இந்திய பாராளுமன்றம் எனப்படும் Council House 1919-ல் நிறுவப்பட்டது. அப்போது இது ராஷ்டிரபதி பவனின் மற்றொரு அங்கமாகவே கருதப்பட்டது. ஆனால் அப்போதைய கட்டிட வசதி போதவில்லை என்பதால் புதிய பெரிய வட்டவடிவிலான ரோமானிய கட்டிட அமைப்பு திட்டமிடப்பட்டது. அந்த திட்டப்படி இப்போதைய இந்த பிரம்மாண்டமான பாராளுமன்ற கட்டிடம் 1921-ல் அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் ஆறு ஆண்டுகால உழைப்பில் 1927-ல் 560 அடி அகலத்திலும், 144 தூண்களோடும் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் கம்பீரமாக எழுந்து நின்றது. சரியாக சொல்ல வேண்டுமெனில் ஜனவரி 18, 1927-ல் அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் லார்டு இர்வின் இந்த பாராளுமன்றத்தை திறந்து வைத்தார். அன்றைய மதிப்பீட்டின்படி ரூபாய் 83 லட்சம் பாராளுமன்ற கட்டிட உருவாக்கத்திற்கு செலவிடப்பட்டது.
கண்ணைக்கவரும் சிவப்பு சிகரமான நமது பாராளுமன்ற கட்டிடம் பல வெளிநாட்டு பிரமுகர்களே வியந்து பாராட்டியதாகும். இதை வடிவமைத்தது புகழ்பெற்ற பிரிட்டிஷ் கட்டிடக் கலை நிபுணர்களான சர்.எட்வின் லூட்டியன்ஸ் மற்றும் சர்.ஹெர்வட் பார்க்கர் ஆவர்.

நமது பாராளுமன்றத்திற்கு 12 நுழைவுவாயில்கள் உள்ளன. ஆனால் சான்சட்மார்க்என்ற நுழைவு வாயிலே பிரதானமானது. சுதந்திரத்திற்கு முன்பு மோதிலால்நேரு, மாளவியா, எஸ். சீனிவாச ஐயங்கார், வித்தல்பாய் பட்டேல், ஆர்.கே.சண்முக செட்டியார். போன்றோர் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு சிறப்பான பங்களித்தனர்.

சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசியலமைப்பு சட்ட வடிவம் கண்டபின் ஜவஹர்லால் நேரு, வல்லபாய்பட்டேல், மௌலானா அப்துல்கலாம் ஆசாத், பி.ஆர்.அம்பேத்கார், ஆர்.கே.சண்முகம் செட்டியார், இரா.செழியன், அறிஞர் அண்ணா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.

நமது பாராளமன்றத்தை இதுவரை 15 சபாநாயகர்கள் வழிநடத்தி உள்ளனர். முதல் சபாநாயகர் ஜி.கே மாவ்லங்கர், அதிக காலம் சுமார் பத்தாண்டு காலம் சபாநாயகராக இருந்தவர் டாக்டர்.பல்ராம் ஜாக்கர், முதல் பெண் சபாநாயகரான மீராகுமாரி 2009-முதல் தொடர்ந்து சபாநாயகராக இருந்து வருகிறார்.

13.5.2012

No comments: