Wednesday, July 3, 2013

இலங்கையில் இந்திய எம்.பிகள்



இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரைக் கொண்ட குழு இலங்கை புறப்பட்டுச் சென்றுள்ளது. பா.. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இக்குழவில் காங்கிரஸ், ஐக்கியஜனதாதளம், பீஜு ஜனதாதளம் எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு காங்கிரஸ் எம்.பிகளும். சி.றி.வி.ன் ஒரு எம்.பியும் இடம் பெற்றுள்ள நிலையில், .தி.மு., தி.மு. தலைமைகள் இந்த இலங்கை பயணத்தை புறக்கணித்துள்ளன.
இது மிகவும் துரதிர்ஷ்டமானது!
``இலங்கை அரசின் விருப்பப்படி பயணதிட்டம் அமைந்துள்ளது. இலங்கைத் தமிழரைபார்த்து பேசும் வாய்ப்பு குறைவாயுள்ளது. இலங்கை அதிபர் ராஜபட்சேவை கடைசி நாள் சந்திப்பதை ஏற்கமுடியாது`` என்பவை தமிழக முதல்வர் கூறிய காரணங்கள்.
இக் குறைபாடுகள் அனைத்தையும் உடனே கவனித்து தற்போது பயணத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், குழுவில் .தி.மு. பிரதிநிதி இடம் பெறவில்லை என்பதோடு, ``தி.மு.கவும் போகாது என தி.மு.. தலைவர் கருணாநிதி கூறியதால் அக்கட்சி பிரதிநிதியும் இடம் பெறவில்லை. இலங்கை செல்லும் பாராளுமன்ற குழுவின் நோக்கம் இவைதாம்; இலங்கைக்கு இந்திய அரசு வழங்கியுள்ள ரூ 1500 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகளால் நடைபெற்று வரும் பணிகள் பற்றிய மதிப்பீடு, இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு மற்றும் அதிகார பகிர்வுக்கான அரசியல் நடவடிக்கைளை வலியுறுத்துவது. இவை அனைத்துமே அவசர, அவசியத் தேவைகள்! அதுவும் மார்ச் மாதம் .நா சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளதன் பின்ணணியில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்வது ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான சகல உதவிகளையும் சாத்தியப் படுத்த இந்திய அரசு இலங்கைக்கு தரும் நேரடி நிர்பந்தமாகவும் இதைக் கருதலாம்.
இதே போல் 2010.ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய எம்.பிகள் குழு சென்று வந்தது. ``அப்போது அகதிகள் முகாமில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இருந்தனர். இந்திய எம்.பிக்கள் குழு தந்த நிர்பந்தத்தினாலேயே அவர்கள் விரைந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இலங்கைத் தமிழர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற 95,000 குடும்பங்களுக்கு வேளாண்மைக் கருவிகள், 40,000 டன் சிமெண்ட் மூட்டைகள், 40,000 கூரைத் தகடுகள்... போன்றவை இந்திய அரசால் .நா மூலம் வழங்கப்பட்டது`` என அக்குழவில் இடம் பெற்ற காங்கிரஸ் எம்.பிக்கள் என்.எஸ்.வி. சித்தன், அழகிரி ஆகியோர் கூறுகின்றனர்.
இவை தவிர மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள், சாலைகள், 107கீ,மீ ரயில் பாதைகள்... போன்ற இந்திய அரசுசார்பில் இலங்கை தமிழர் பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை மதிப்பீடு செய்து விரைவுபடுத்துவதும், இலங்கைத் தமிழர்களுக்கு இதன் மூலம் நம்பிக்கையளிப்பதும் நமது தார்மீக கடமையாகும்!
இந்தப் பிரச்சனையில் சண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை இங்கே மேடைபோட்டு வசைபாடுவதாலோ, அறிக்கைகள்  தருவதாலோ ஒன்றும் பலனில்லை. அதே சமயம் நேரடியாக அங்கே சென்று உண்மை நிலவரங்களை அறிந்து நேருக்குநேராக ராஜபட்சேவிடம் பேசி நிர்பந்திப்பதே சரியான அணுகுமுறையாகும்! தமிழக கட்சிகளின் இன உணர்ச்சி அரசியல் இங்கே ஒட்டுப்பெற உதவலாம்! அங்கேயுள்ள தமிழர்களுக்கு இந்த அணுகுமுறையால் பலனொன்றும் இல்லை!

6.4.2012

No comments: