Wednesday, July 3, 2013

நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்கள் போராட்டம்



மிகவும் லாபகரமாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று மத்திய அரசின் கீழ் செயல்படும் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன். 50 ஆண்டுகளைக்கடந்து இயங்கும் இந் நிறுவனம் அடிக்கடி சர்ச்சைகளில் அடிபடும் நிறுவனமாயுள்ளது.
சுமார் 4700 கோடி வருமானத்தில் இயங்கும் இந்நிறுவனத்தின் பங்குகளை 10% தனியாருக்கு விற்கும் முயற்சி கடந்த காலங்களில் நடைபெற்ற போது, அன்றைய தி.மு. அரசு அதை இரண்டு முறை உறுதியோடு தடுத்தது. இதுபோல் இந்நிறுவனத்தின் மீதும், அதன் தலைவர் மீதும் பல்லாயிரம் கோடி ஊழல் புகார்களும்அது தொடர்பான சி.பி. விசாரணையெல்லாம் கூட நடைபெற்றது. தற்போது இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடைபெற்று கைதிலிருந்து தங்களை தற்காத்து வருகிறார்கள்.
பல சர்ச்சைகளில் தொடர்ந்து அடிபடும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நீண்டகால பிரச்சினையாக - தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்  - என்ற போராட்டம் இருந்து வருகிறது. தற்போது அந்தப் போராட்டம் மீண்டும் பூதாகரமாக வெடித்து 17 நாட்களைக் கடந்து, பற்றி எரியும் பிரச்சினையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஏற்கெனவே மின்வெட்டு, மின்பற்றாக்குறை மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் போது-நெய்வேலி அனல் மின் நிலையமின் உற்பத்தியின் 60 சதவிகிதமான 1167 மேகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் - இப்போராட்டம் தமிழக மக்களைபெரிதும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. ஆகவே இதில் தமிழக அரசு தலையிடுவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பிரச்சினையின் சாராம்சம் இதுதான்;
நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் நிலத்தற்கடியில் மிக ஆழமாக துளைபோட்டு, சுரங்கம் அமைத்து பழுப்பு நிலக்கரியை ஆயிரக்கணக்கான டன் அள்ளுகிறது. பிறகு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கிறது, இதில் ஆபத்தான சுரங்கப்பணிகள், மின்கம்பங்களில் ஏறி உயர் அழுத்த மின்சாரத்தை நெறிமுறை படுத்தும் வேலைகள்... போன்றவை தற்காலிக ஊழியர்களைக் கொண்டு மட்டுமே செய்யப்படுகின்றன. நிரந்தரமான ஊழியர்கள் இவ்வித வேலைகளில் ஈடுபடுவதில்லை.
ஆனால் நிரந்தர ஊழியர்கள் சுமார் 15,000 பேருக்கு 30,000 முதல் 40,000 வரை சம்பளம், வீடு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கிவருகிறது நிர்வாகம். ஆபத்தான பணிகளில் ஈடுபட்டு கடின உழைப்பை நல்கும் சுமார் 9,000 பணியாளர்களுக்கோ நாள்கூலி கணக்கிட்டு பத்தாயிரத்திற்கும் குறைவாகவே தருகிறது. இந்த ஓரவஞ்சனையை கைவிட்டு 10 ஆண்டுகள் தொடங்கி 25 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாகவே உழைக்கும் எங்களுக்கும் சம நீதியும், சமநிதியும் தரவேண்டும் என்கிறார்கள் தற்காலிகத் தொழிலாளர்கள்!
இந்த விவகாரத்தை ஆராய்ந்தால் மத்திய அரசு ஏற்கெனவே ணீதீஷீறீவீtவீஷீஸீ ஷீயீ நீஷீஸீtக்ஷீணீநீt றீணீதீஷீuக்ஷீs மற்றும் ஸிமீஹீuறீணீtவீஷீஸீ ணீநீt போன்ற சட்டங்களைக் கொண்டுவந்துள்ளதையும், நமது உச்சநீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஓராண்டுக்கு மேல் அனுமதிப்பதை கடுமையாக கண்டித்திருப்பதையும் நாம் நினைவு கூறாமல் இருக்க முடியாது.
மத்திய அரசு தன்னால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை தானே மீறுவதோடு, உச்சநீதிமன்றத்தின் ஆணைகளையும் உதாசீனப்படுத்துகிறதோ... என்று தான் தோன்றுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே தற்காலிக ஊழியர்கள் போராட்டம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது என்றால் இந்த நிர்வாக அமைப்பில் ஏதோ இமாலயக் குளறுபடிகள் இருப்பதாக அர்த்தம்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கே உரிய ஊழல், அலட்சியபோக்குகள், அதீத ஆபீசர்கள் மற்றும் வேலை செய்யாத ஊழியர்கள்... என இடியாப்ப சிக்கலில் உழல்கிறது இந்நிறுவனம். அதிலும் சுமார் 3000க்கு மேற்பட்ட எக்ஸியூடிவ்களாம்! அதில் 1000 தலைமை என்ஜினியர்களாம்! இவர்கள் அனைவருக்கும் ஒன்றரை லட்சம் சம்பளம், பல லட்சம் போனஸ்சாம்!
இப்படி ஒரு புறம் அள்ளிக் கொடுத்து வளமாய் வாழ்வதற்கு மற்றொரு புறம் அப்பாவி தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ...? என்று நினைப்பதை தவிர்க்க முடியவில்லை!

10.5.2012

No comments: