Friday, May 24, 2013

ஏலம் போகிறதா எம்.பி பதவிகள்?




ஒரு புறம் இந்த சந்தோஷமிருக்கமறுபுறம் நம் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியத்திருநாட்டில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பன்றித்தொழுவமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள்!
எம்.பி பதவிகள் ரகசியமாக ஏலம்விடப்பட்டுவருகின்றன!
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இரண்டு ராஜ்யசபா எம்.பிபதவிகளுக்கு விலைபேசப்பட்ட வில்லங்கம் வெளிப்பட்டுதேர்தல் கமிஷன் தேர்தலையே நிறுத்தி வைத்த சம்பவம் ஜனநாயகத்திற்கு தலை குனிவும்பண நாயகத்திற்கு தலைகிரீடமுமாக நமது அரசியல் அவலமாகியிருப்பதையே அம்பலப்படுத்துகிறது.
இதே.எம்.பி வாய்ப்பைத்தான் பா.. தலைவர் நிதின்கட்கரி ஒரு தொழில் அதிபரிடம் தாரைவார்த்ததும்அது அத்வானியால் கண்டிக்கப்பட்டுதடைபட்டதும் நாடறியும்!
சமீபத்தில் .பி.என்னும்கோப்ரா போஸ்டும் பல மாநிலங்களின் எம்.எல்.ஏக்களிடம் நடத்திய ரகசிய ஆய்வில் கணிசமான எம்.எல்.ஏக்கள் ரூ 50 லட்சம்  முதல் ஒரு கோடி கிடைக்கும் பட்சத்தில் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போட்டு ராஜ்யசபா எம்.பியாக்க தயாராயிருப்பது வெளிப்பட்டுள்ளது.
எனவே விளைவுகள் விபரீதமாகும் முன் விழித்துகொள்ள வேண்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் கறாரான சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்.

No comments: