Friday, May 24, 2013

மம்தா பானர்ஜியா? மமதை பானர்ஜியா?




எளிய மக்களின் பிரதிநிதியாகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும், சலிப்பில்லாத போராளியாகவும் அறியப்பட்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானார்ஜி தற்போது அதிரடி அரசியல்வாதியாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறார்.
நலிந்து கொண்டிருக்கும் ரயில்வே துறையை தூக்கி நிறுத்தவும், புதிய வழித்தடங்கள், புதிய ரயில்கள், பாதுகாப்பான பயணம், சர்வதேச தரத்திலான நவீன வசதிகள்... போன்ற பயணிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் ரயில்வே பட்ஜெட்  சமர்பித்தார் தினேஷ்திரிவேதி. இதற்காக மிதமான கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்பதாலேயே இந்த பட்ஜெட் மக்களின் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. கட்சி வேறுபாடின்றி அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் தினேஷ்திரிவேதியின் பட்ஜெட்டை ஆதரிக்கின்றன. ரயில்வேயை அதிகமாக பயன்படுத்தும் பற்பல தொழில் துறையினரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் மம்தா பானர்ஜியோ கடுமையாக எதிர்க்கிறார்.
அவர் எதிர்ப்பது ரயில்வே பட்ஜெட்டையல்ல, மத்திய அரசை, காங்கிரசை என்பது தான் நிஜம்!
அதனால் தான் ஒன்றையடுத்து ஒன்றாக மத்திய அரசுக்கு அவர் நெருக்கடி தந்து வருகிறார்.
அவர் மம்தா பானர்ஜியா? மமதை பானார்ஜியா? என்பது மக்கள் மனதில் கேள்விக்குறியாகிவிட்டது!
பின்குறிப்பு;
கடைசியில் காங்கிரஸ் கட்சி கீழே இறங்கி வந்து ரயில்வே பட்ஜெட்டில் பற்பல மாற்றங்கள் செய்து, மம்தாவின் நிர்பந்தத்திற்கேற்ப ரயில்வே அமைச்சர் ரமேஷ்திரிவேதியை விலக்கி, புதிய ரயில்வே அமைச்சருக்கு பூபாளம் பாடியது. இந்தக் கேடுகெட்ட பிளாக்மெயில் அரசியலை நாடு பார்த்ததும், நல்லோர் திகைத்ததும் நம்பமுடியாத வரலாற்று பதிவானது.
15.3.2012

No comments: