Friday, May 24, 2013

ஐ.நா. சபையில் அவமானப்பட்ட இலங்கை




எதிர்பார்த்தது நடந்தது, எண்ணியது முடிந்தது, தமிழர்களின் தவம் பலித்தது!
ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் .நா மனித உரிமை கவுன்சில் அமர்வில் அமெரிக்கா, நார்வே, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தான் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரிலும் சரி, அதற்கு முந்தைய இலங்கை அரசின் முயற்சிகளுக்கும் சரி முழு ஆதரவை நல்கி இராணுவ உதவிகள் வழங்கின.
எனில் அப்படியிருக்க, இந்த நாடுகளுக்கு தற்போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு தார்மீகத் தகுதி உண்டா? என்ற கேள்வி எழலாம்!
தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு யுத்தம் என்ற வகையில் அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பிறகு உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு சூழலில் இலங்கையை சர்வதேச நாடுகள் அனைத்துமே ஆதரித்தன.
2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசு வென்றது. அதன் பிறகான பல தரப்பட்ட கள ஆய்வில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற வகையில் இலங்கை அரசு தங்களிடம் பெற்ற உதவியைக் கொண்டு மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களை அப்பாவி மக்கள் மீது பிரயோகித்தது சர்வதேச சமூகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது மட்டுமல்ல, .நா.மனித உரிமை கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் யுத்தத்திற்கு பிறகான இலங்கை அரசின் மோசமான இனப்பாகுபாடு அணுகுமுறைகளும், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த அரசு செய்து கொண்டிருக்கும் நியாயப்படுத்த முடியாத அநீதிகளுமே அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை அரசை எதிர்க்கக் காரணமாயின.
அதனால் தான் .நா.மனித உரிமை கவுன்சில் கொண்டுவந்த தீர்மானத்தில் யுத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து மட்டுமல்ல, அதன் பிறகான இலங்கை அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது.
குறைந்தபட்சம் இலங்கை அரசே நியமித்த ஜிலீமீ லிமீssஷீஸீ லிமீணீக்ஷீஸீt ணீஸீபீ ஸிமீநீஷீஸீநீவீறீணீtவீஷீஸீ சிஷீனீனீவீsவீஷீஸீ-னின் பரிந்துரைகளைக் கூட ராஜபட்சே அரசு நிறைவேற்றவில்லை.
குறிப்பாக தமிழர்கள் பகுதியில் ராணுவ குவிப்பு, நூற்றுக்கணக்கான இளைஞர்களை காணாமல் போனது, 2000 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது, மூன்றாண்டுகள் முடியவிருக்கும் தருவாயிலும் இயல்பு வாழ்க்கைக்கு தமிழ் மக்கள் திரும்ப முடியாத வகையில் பல இடையூறுகளை ஏற்படுத்தியிருப்பது போன்றவையே பிரதான அம்சமாகும்!
இதனால் தான் இலங்கை அரசுடன் பல்லாண்டுகள் இணக்கமாக இருந்து அமைதி பேச்சுவார்த்தைகளில் நடுநிலையோடு செயல்பட்ட நார்வே நாடும் இலங்கையை எதிர்த்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த தீர்மானத்தை ஆதரிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன. அவை தெற்காசிய கூட்டமைப்பு, அணிசேரா நாடுகள், இந்திய - இலங்கை நட்பு, இலங்கையில் தமிழர் பகுதிகளில் இந்தியாவின் உதவியால் நடைபெறும் மாபெரும் பணிகள் என்பதோடு இந்தியாவின் நலன்களுக்கான பார்வைகளையும் உள்ளடக்கியது.
ஆனால் இவற்றையெல்லாம் மீறி தார்மீக ரீதியில் அது தமிழர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டியுள்ளது. இந்தியாவின் இந்த அணுகுமுறை ராஜபட்சே அரசுக்கு எதிரானதேயன்றி இலங்கை மக்களுக்கு எதிரானதல்ல..!
இதற்குப் பிறகாவது இலங்கை அரசு உலக நாடுகளுடன் மோதல் போக்கை தவிர்த்து குறைந்த பட்சம் லிலிஸிசி பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றும் என நம்புவோம்.
22.3.2012

No comments: