Tuesday, September 4, 2012

அண்ணாபல்கலைக்கழகம்


                                                                                                                        -சாவித்தரிகண்ணன்
சர்வதேச அளவில் மரியாதை பெற்றது அண்ணாபல்கலைக்கழகம்...!
இது 1978ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.
இங்கே படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடியும் முன்பே மிகப்பெரிய நிறுவனங்கள் நாடி வந்து வேலைவாய்ப்பை உறுதிசெய்கின்றன.

இந்தளவு சிறப்பு பெற்ற அண்ணாபல்கலைகழகத்தில் இடையே சில ஆண்டுகள் ஏற்பட்ட தொய்வும், கெட்டபெயர்களும் தற்போது சரி, செய்யப்பட்டுள்ளதான நம்பிக்கை துளிர்த்துள்ளது.

ஆம்! தமிழக அரசின் ஐந்து பல்கலைக் கழகங்களை பழையப்படி ஒரே சென்னை பல்கலைக் கழகமாக்கும் முடிவு பற்பல சீர்கேடுகளுக்கு முடிவு கட்டியுள்ளது.

2007 ஆம் ஆண்டு, சென்ற ஆட்சியில் சென்னை அண்ணாபல்கலைக்கழகம் ஐந்தாக பிரிக்கப்பட்டது. அதன்படி திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலியில் புதிய அண்ணாபல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.

உரிய அடிப்படை கட்டமைப்புகளோ, திட்டமிடலோ இல்லாமல் அதிரடியான ஒரு அரசாணையால் இவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது. எனவே ஆங்காங்கேயுள்ள அரசு கல்லூரிகளின் ஒன்றிரண்டு கட்டங்கள் அண்ணா பல்கலைக் கழகம் என உருமாற்றம் கண்டன. இந்த வகையில் திருச்சியில் மட்டுமே ஐந்து வளாகங்களில் சிதறிய நிலையில் அண்ணாபல்கலை இயங்கியது.

புதிதாக துவங்கப்படுகின்ற தனியார் பொறியியல் கல்லூரிகள் பலவே தகதகப்புடன் பிரம்மாண்ட கட்டமைப்புகளுடன் பொலிவாக காட்சி தரும்போது புகழ்பெற்ற அண்ணாபல்கலைக் கழகங்கள் கம்பீரமாகவல்லவா காட்சி தந்திருக்கவேண்டும்.....?

கொள்கை ரீதியாக பார்ப்போமேயானால் அதிகாரபரவல், நிர்வாகவசதி கருதி அந்தந்த பகுதிகளில் புதிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படுவது அவசியம் தான்! நோக்கம் இருக்கும் பட்சத்தில்!

ஆனால் நடந்தது என்ன?

புதிய பல்கலைகழக துணைவேந்தர் பதவிகள் விலைபேசி விற்கப்படுவதற்கும், தரமில்லாத பொறியியல் கல்லூரிகள் பல புற்றீசல்கள் போல் தோன்றி ஆங்காங்கேயுள்ள அண்ணாபல்கலையின் அங்கீகாரம் பெறுவதற்கும், பல்கலைகழகத்தின் பாரம்பரிய பெருமைகள் நீர்குலைவதற்குமே அந்த முடிவு அடிகோலியது.

ஆகவே தான் புதிய அரசு பதவியேற்றவுடனே அண்ணபல்கலைக்கழகங்கள் ஒரே குடையின் கீழ் பழைய நிலைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு சகலவிதத்திலும் கள ஆய்வு செய்து, அரசின் முடவை பாதிப்பில்லாமல் சாத்தியப்படுத்தும் அறிக்கை தந்தது.

அதன்படி தற்போது மற்ற பகுதிகளில் செயல்பட்ட அண்ணாபல்கலைகள் மண்டல அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளதும், அத்தடன் கூடுதலாக 17பகுதி அலுவலகங்கள் அண்ணாபல்கலைக்கு உருவாக்கப்படுவதும் வரவேற்கத்தக்க முடிவே!

இதனால் இனிமேல் 535 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 12 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ்வருவதோடு ஒரேவிதமான பாடத்த்இட்டங்கள், ஒரே அணுகுமுறையிலான தேர்வுகளும், தேர்வுமதிப்பீடுகளும் அமையும். இதோடு இனி சென்னை அண்ணாபல்கலைகழகமே அனைவருக்கும் உயர்கல்விக்கான பட்டங்களை தரும்!

இந்திய அளவில் ஐந்தாவது சிறந்த பல்கலையாகவும், ஐந்துநட்சத்திர அந்தஸ்த்தும் பெற்றுத் திகழும் அண்ணாபல்கலைக்கழகம் இடைக்காத்த்தில் ஏற்பெட்ட சரிவுகளை சரிசெய்து இனி மேன்மேலும் பொலிவுபெறப்படும்! தேவைப்படின் வருங்காலத்தில் புதிய பல்கலைக்கழகங்கள் முறையான திட்டமிட்டவுடன், கல்விசார்ந்த உயர்ந்த நோக்கத்துடன் தோற்றுவிக்கப்டட்டும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
23-7-2012

No comments: