Tuesday, September 4, 2012

அமைச்சரவை மாற்றங்கள்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை அரசியல்தளத்தில் சிற்சில அதிர்வுகளையும், சமூகதளத்தில் சில சலசலப்புகளையும் ஒருங்கே நிகழ்த்தியுள்ளது.

முக்கியமான பொறுப்புகளை வகித்த மூன்று அமைச்சர்கள் இதில் மேன்மேலும் கவனம் பெற்றுள்ளனர்.

ப.சிதம்பரம், சுசில் குமார் ஷிண்டே, வீரப்பாமொய்லி... என்ற இந்த மூவரும் தற்போது மேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டனர்.

கம்பெனி விவகாரத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லிக்கு கூடுதலாக மின்துறை வழங்கப்பட்டுள்ளதை இரண்டு வகையில் வரவேற்க்கலாம். முதலாவதாக வீரப்பமொய்லி இதற்கு தகுதியானவர். மாநில முதலமைச்சராகவும் மத்திய அமைச்சரவையில் பற்பல பொறுப்புகளையும் வகித்தவர். சிறந்த கல்வியாளர், கவிஞர், நாவலாசிரியர், நவீனசிந்தனையாளர் திறமையாளர் என்ற வகையில் கூடுதல் பொறுப்பு அவருக்கு சுமையல்ல!

இரண்டாவது ஏற்கெனவே 80க்கும் மேற்பட்ட அமைச்சர்களைக் கொண்டு கூட்டணி தர்மத்தால் கூடுதல் அமைச்சர்களை திணித்துக் கொண்டு செயல்படும் மத்திய அமைச்சரவையில் கூடுதலாக ஒரு அமைச்சர் சேர்க்கப்படாமலேயே பிரணாப் முகர்ஜி விட்டுச் சென்ற வெற்றிடத்தை சமாளித்தற்காக வரவேற்க்கலாம்! அன்றைய நேருவின் அரசில் 16 அமைச்சர்களே இருந்தனர்.
தற்போதைய மத்திய அமைச்சரவையிலேயே அதிக சர்ச்சைக்குரியவராகவும், அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டுள்ளவருமான ப.சிதம்பரத்திற்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது - கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

2ஜிபெக்ட்ரம் ஊழல், ஏர்செல் - மேக்சிம் பீல்.... போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டு எதிர்கட்சிகளால் பதவி விலக கோரிய சிதம்பரம் இன்று நிதி அமைச்சராக ஏற்றம் பெற்றிருப்பது எதிர்கட்சிகளை எரிச்சலுட்டியுள்ளதோடு, அண்ணாஹாசரே போன்ற ஊழல்எதிர்ப்பாளர்களை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.

ஏற்கெனவே மூன்று முறை நிதி அமைச்சராயிருந்துள்ளவர் ப.சிதம்பரம், அவர் அவ்வப்போது Voluntary disclosure income scheme ஐ அறிமுகப்படுத்தியது அன்றைய பொது தணிக்கை துறை தலைமை அதிகாரியின் கடும் விமர்சனத்தை பெற்றது. வரி ஏய்ப்பாளர்களையும், தவறான வழிமுறைகளில் சம்பாதித்தவர்களையும் அங்கீகரித்து ஞானஸ்தானம் தந்ததன் மூலம் நிதி அமைச்சர் சிதம்பரம் நேர்மையாக வரிகட்டிய மக்களை அவமதித்துவிட்டார் என்ற பேச்சு எழுந்தது.

உலகம் முழுமையும் கெட்டபெயர் சம்பாதித்த அமெரிக்காவின் என்ரான் நிறுவனத்திற்கும், இந்திய பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு இந்தியாவின் கனிமவளங்களை கொள்ளையிடும் வேதாந்தா ரிசோர்சஸுக்கும் ஆதரவாக வாதாடிய தார்மீக பார்வைகளுக்கு ஒரு சிறிதும் முக்கியத்துவம் தராதவழக்கறிஞரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 98 சதவிகிதம் என்ற உயர்ந்த இலக்கை எட்டியிருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை சுசில்குமார் ஷிண்டேவை பொறுத்தவரை சர்ச்சைக்கு அதிகமாக இடம் தராதவர் என்ற போதிலும் அவர் இது நாள்வரை மின்துறையை சிறப்பாக நிர்வகித்தவரல்ல! சோனியாவின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரான ஷிண்டேவுக்கு முன்பு குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஏற்பட்ட தோல்வியை ஈடுகட்ட ஆந்திர கவர்னராக்கப்பட்டார்.

சுஷில்குமார் ஷிண்டே ஆரம்பத்தில் சப் இன்ஸ்ப்பெக்டராக இருந்தவர். இன்று இந்தியாவை கட்டிக் காப்பாற்றும் உள்துறை அமைச்சகப்பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது அடிக்கடி நிகழும் குண்டுவெடிப்புகள், மாவோயிஸ்ட்டஸ் பிரச்சினை, அந்நிய ஊடுருவல்கள், உள்நாட்டுக் கலவரங்கள்... போன்ற சவால்கள் நிறைந்த பொறுப்பை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!
மத்திய அமைச்சரவையில் ஏறப்பட்டுள்ள மாற்றங்கள் மக்களுக்காக ஏமாற்றங்களாக மாறிவிடக்கூடாது என்பதே நம் பிரார்த்தனையாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
01-08-2012

No comments: