Saturday, September 1, 2012

குழந்தை திருமணங்கள்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

பால்வடியும் முகங்கள்
படிக்க வேண்டிய வயது
ஆனால் திருமணங்கள் நடத்திவைக்கப்படுகின்றன.

21-ஆம் நூற்றாண்டில் - அதுவும் தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் இது போன்ற குழுந்தை திருமணச் செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன.
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா இதற்காக 400க்கு மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து குழந்தை திருமணதடுப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார்.

மதுரை மாவட்ட கலெக்டராக சகாயம் இருந்தபோது ஏராளமான குழந்தை திருமணங்களை தன் சக்திக்கு முடிந்த அளவில் தடுத்து நிறுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கடந்த பத்துமாதங்களில் மாவட்ட நிர்வாகத்தின் முன்முயற்சியால் ச்மார் 100 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியதாகக் கூறுகிறார்.

திருச்சியில் 27 குழந்தை திருமணங்களும், கிருஷ்ணகிரியில் 64 குழந்தை திருமணங்களும் சமீபத்தில் தடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு என்ன காரணங்கள்?

அறியாமை,படிப்பறிவின்மை, ஏழ்மை...என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக கூறிவிடமுடியாது.

படித்த குடும்பங்களிலும் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன, அவ்வளவு ஏன்? இங்கிலாந்து அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில் இங்கிலாந்திலுள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் குடும்பங்களின் மீது வருடந்தோறும் சராசரியாக 1500 வழக்குகள் குழந்தை திருமணத்தின் காரணமாக போடப்படுகின்றன.

ஆணுக்கு 21 வயது, பெண்ணுக்கு 18 வயது என்று சட்டம் கூறலாம் ஆனால் சம்பிரதாயங்கள் ஒத்து கொள்ளவில்லை.

சம்பிரதாயம் மட்டுமின்றி இன்றைய தினம் காதலும் இதற்கொர் காரணம் என்கிறார்கள் பெற்றோர். இன்று 13, 14 வயதிலேயே காதலிக்கத் தொடங்கி வீட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றும் சிறுவர், சிறுமியரை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் நிர்பந்தமாகவும் பல இடங்களில் குழந்தை திருமணங்கள் அரங்கேறுகின்றன.

தங்களுக்கு திருமணவயது எட்டாத நிலையில் ஓடிபோய் திருமணம் செய்யும் இளம் ஜோடிகளின் எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கில்லை.
உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் திருமணவாழ்க்கைக்கு தயாராகாத போது ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம்.... ஏராளம்! குறிப்பாக 18 வயதிற்கு குறைவான பெண்கள் பிரசவிக்கும் போது பெரும்பாலும் அப்பிரசவம் தோல்வியிலேயே முடிகிறது.

"குழந்தை திருமணதடுப்பை இஸ்லாமியர்களுக்கு நிர்பந்திக்கக்கூடாது. இது எங்கள் மத உரிமை மற்றும் கோட்பாட்டிற்கு எதிரானது. ஷரியத் சட்டப்படி ஒரு பெண் பூப்பெய்தி விட்டாலே திருமணத்திற்கு தயாரானதாக அர்த்தம்" என இஸ்லாமியர்கள் சிலர் கூறுகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டம்.

உடல், மனம், குடும்பம், பொருளாதாரம், சமூகம்... என எந்த தளத்திலும் தங்களை தகவமைத்து கொள்ள இயலாத வயதில் செய்யப்படும் திருமணம், சம்பந்தப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல. சமூகத்திலும் பற்பல பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன.

இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கில் குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டே உள்ளன. 1929- ல் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்த குழந்தை திருமண தடைசட்டமும் 2006ல் இந்திய அரசால் திருத்தி அமைத்து "prohibion of child Marriage avt' - ம் பெரிய அளவு பலன் தரவில்லை.

மக்களின் மனம் மாறவேண்டும். அதோடு திருமணப் பதிவை கட்டாயமாக்க வேண்டும். குழந்தை திருமண தம்பதிகளுக்கு ரேஷன்கார்டு உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் தடைசெய்யவேண்டும். சட்டத்தை கடுமை ஆக்குவதோடு சமூக தளத்தில் சீர்திருத்த கருத்துகளை முன்னெடுக்க வேண்டும்.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
JULY

1 comment:

Anonymous said...

Respected sir .

In an recent interview (conducted by mr sunil ) on JAYAplus channel one social worker mentioned that lyricist Mr vairamuthu arranged the connection between ex cm Mr M karunanidhi and Granite baron PR Palanisamy and even made PRP to invest huge money in film production. why ex CM had not refuted this 'nexus' till now or challenged the accusation .The most surprising factor is (it seems ) no 'main stream' media has taken this shocking revelation as NEWS or even sought the views of the accused persons . Are you writing on the granite scam ..we appreciate your assessment and unbiased coverage. thanks.