Friday, September 7, 2012

தமிழர்களின் உழைக்கும் ஆர்வம் குறைகிறதா?

-சாவித்திரிகண்ணன்
 
சமீப காலமாக தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்கி பெருகி வளர்ந்து கொண்டிருக்கிறது.
கட்டுமானத் தொழில்கள், ஹோட்டல் இண்டஸ்டிரிஸ், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்... போன்ற இடங்களிலெல்லாம் பெரும்பாலும் இந்த வட மாநிலத் தொழிலாளர்களே காணப்படுகின்றனர்.
 
கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கடும் உழைப்புத் தேவைப்படும் இது போன்ற துறைகளில் தமிழர்களல்லாதவர்களே வேலைசெய்யும் நிலை உருவாகியுள்ளது.
 
ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே இவர்கள் வேலைசெய்தனர். ஆனால் பின்பு தமிழகத்தின் முக்கியமான பெருநகரங்கள் அனைத்திலுமே வேலைசெய்கின்றனர் எனத் தெரியவருகிறது.
 
இந்தியாவிற்குள் யாரும் எங்கும் சென்று வேலைபார்க்கலாம். இதில் குற்றம் காண்பதற்கில்லை.
 
ஆனால் ஏழரைக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் சமீபகாலமாக விவசாயத்தில், கட்டுமானத் தொழில்களில், ஹோட்டல்களில் பல்பொருள் அங்காடிகளில் வேலைசெய்வதற்கு தமிழர்கள் முன் வருவதில்லை என்ற வருத்தங்கள், ஏமாற்றங்கள், கோபவெளிப்பாடுகள் பரவலாக காணமுடிகிறது.
 
உழைப்பு அதிகம் தேவைப்படாத 100நாள் வேலைதிட்டத்திற்கு மட்டும் ஆட்கள் கிடைப்பதற்கு பஞ்சமில்லை.
 
இலவச அறிவிப்பு வெளியிட்டால் அதை பெறுவதற்கு திரளும் கூட்டத்திற்கு குறைவில்லை.
 
அதிகாலைத் தொடங்கி பின் இரவு வரை டாஸ்மார்க் மதுபானக் கடைகளில் குவியும் குடிமகன்கள் கூட்டத்திற்கு அளவில்லை. உழைப்பும், தன்மானமுமே தங்கள் மூலதனமாகக் கொண்ட தமிழகத்து உழைக்கும் மக்களிடம் சமீப காலமாகத் தென்படும் கலாச்சார மாற்றங்கள் கவலையளிப்பதாக உள்ளது.
 
ஏன் தமிழகத்தில் அதிகமான வட இந்திய தொழிலாளர்கள் பெருகி வருகின்றனர் என்பதற்கான விடையாக உழைப்பதில் அவர்கள் காட்டும் ஈடுபாடு, கட்டுப்படியாகக் கூடிய கூலி, மது போன்றவற்றிற்கு பணத்தை விரயமாக்காத சிக்கனம், சண்டைசச் சரவில்லாத நடவடிக்கைகள்... என்ற பதில்களே கிடைக்கின்றன.
 
இதனால் இவர்கள் குறைத்த கூலிக்கு சுரண்டப்படும் அவலமும் ஒரு புறம் நடக்கின்றது. இவர்களில் ஒரு சிலர் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டது வேளச்சேரி வங்கி கொள்ளையில் வெளியான சமீபத்தில் மெட்ரோ ரயில்திட்டவிபத்தில், தனியார் பொறியல் கல்லூரி கட்டுமானவிபத்தில், கோவையில் நடந்த ஒரு கட்டுமானப்பணியில் இந்த வடமாநிலத் தொழிலாளர்களே தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
 
வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்களில் பல வடகிழக்கு இந்திய மாநிலங்களில் எங்கெங்கும் காணப்படுவது போல் தமிழகத்திலும் இந்த வடமாநிலத் தொழிலாளர்களோடு இவர்களும் கலந்து பரவலாக செயல்படுகின்றனர். ஆனால் இவர்கள் தங்களை இந்தியர்களாகவும், இந்துக்களாகவும் அடையாளப்படுத்தி பிழைத்து வருவதும் நடக்கிறது.
 
தமிழக அரசு தற்போதைய இந்த சமூகவளர்ச்சி போக்கில் இரண்டு விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக தமிழகத்தில் பல்கி பெருகி கொண்டிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் குறித்த முறையான பதிவுகள் உருவாக்கவேண்டும். இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், இவர்களின் பின்னணி, இவர்கள் செய்யும் வேலைகள், தங்கும் இடங்கள், இவர்களின் குற்றச் செயல்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படவேண்டும். முறையான Records இருக்கவேண்டும்.
 
அடுத்ததாக தமிழக உழைக்கும் மக்களின் மாறிக் கொண்டிருக்கும் மனோபாவம் குறித்து உடனடியாக தீவிர அக்கரை செலுத்த வேண்டும் தமிழக மக்களும், நாடும் வருங்காலத்தில் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் முன்பு விழிந்தெழுந்து - களைவன களைந்து வேண்டுவன நிவர்த்திக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: