Tuesday, September 4, 2012

கொல்லப்படும் மீனவர்கள்



                                                                                                                        -சாவித்தரிகண்ணன்
'கடலில் மீன்பிடிக்கச் சென்றால் உயிருக்கு உத்திரவாதமில்லை' என்பது தமிழக கடற்கரைபகுதிகளில் ஒரு அறிவிக்கப்படாத சட்டமாக அமலாகிக் கொண்டுள்ளது.

இதுவரை சுமார் 500க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து தொழில் செய்ய இயலாதவர்களாகியுள்ளனர்.
கோடிக்கணக்கில் மீனவர்களின் உடைமைகள் பறிபோயியுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த இன்னல்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் விடை காணாத வினாக்கள் நிறையவே உள்ளன!
  • நம்நாட்டு மீனவர்களை ஒரு அந்நிய நாட்டின் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி உயிர்பலி கொள்வதை இந்திய அரசு ஏன் இதுநாள்வரை ஒரு முக்கியமான பிரச்சனினையாக கருதவில்லை...?

  • முன்னாள், இந்நாள் தமிழக முதல்வர்கள் மீண்டும், மீண்டும் உருக்கமாக இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியும், இலங்கை கடற்படையினரின் செயல்பாடுகளை இந்திய அரசால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?

  • இந்திய பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ.எமெ. கிருஷ்ணா, பேசும் போது இந்திய கடற்பகுதியில் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கையை மிக, மிக குறைத்து கூறியதோடு, 'கொல்லப்பட்டனர்' என்ற சொல்லுக்கு மாறாக 'இறந்தனர்' எனக் குறிப்பிட்டார் அதோடு இலங்கை அரை விமர்சிக்கும் அல்லது கண்டிக்கும் ஒரு வார்த்தை கூட அவரது உரையில் இடம்பெற வில்லையே - ஏன்?

  • இந்த விவகாரத்தில் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்வதும், மீன்பிடிப்பதும் குற்றமென மத்திய அரசு கருதுமாயின் இதில் தமிழக அரசின் நிலைாடு என்ன?

  • இந்திய இலங்கை கடற்எல்லைபகுதிகளில் நமது மீனவர்கள் எல்லைக் கோட்டை தாண்டாதவாறு கண்காணிக்கவும், இலங்கை கடற்படையினன் தாக்குதல்களிலிருந்து மீனவர்களை காக்கவும் இந்திய கடற்படையினர் ரோந்து வருவதற்கு தமிழக அரசும், மீனவர்களும் தடுப்பது ஏன்?

  • இந்திய மீனவர்களின் உயிரைவிட இலங்கை அரசின் நட்பை அல்லது தயவை இந்திய அரசு பெரிதாக மதிக்கிறதா? இந்திய நிலப்பரப்பில் நூறில் ஒரு பங்கு கூட இல்லாத இலங்கையின் கடற்படையினர் இந்தியர்களை கொல்வது இந்தியாவிற்கு அவமானமில்லையா?

இது போன்ற கேள்விகளுக்கு உண்மையான விடை தெரியாத வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படமாட்டாது.

இந்தியா - இலங்கை மீனவர்கள் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் இணக்கமான உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தியப் பிரதமருக்கும் இலங்கை அதிபருக்கும் இடையிலாக நடந்த பேச்சுவார்த்தையினாலும் பயனில்லை. எனில் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்கதை தானா?
தமிழக முதல்வரிகளின் கடிதங்களும், மத்திய அரசின் பதில்களும் வெறும் சடங்குகள் தானா?

ஒரு ஜனநாயக நாட்டில், மக்களாட்சி முறையில் இத்தனை மர்மங்களும் புதிர்களும் நியாயம் தானா?

மத்திய அரசுகள் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் இப்பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

தவறு யார் மீது எனக் கண்டாலும் தயங்காமல் தடுக்கவேண்டும்! ஏழை எளியவர்கள் தான் மீனவர்கள் என்றாலும் அவர்களின் உயிர்களும், உடைமைகளும் அலட்இயப்படுத்ததக்கதல்ல - என்பதை அரசாங்கங்கள் உணரவேண்டும்!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
24-07- 2012

No comments: