Tuesday, September 4, 2012

அண்ணா ஹாசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம்


                                                                                                                      -சாவித்தரிகண்ணன்
மீண்டும் அண்ணாஹசாரே குழுவினர் ஊழலுக்கு எதிரான அறப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

லோக்பால் மசோதா என்ற மக்கள் மன்ற மசோதாவை வலியுறுத்தும் குரல்கள் இந்திய அரசியலில் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. இருப்பினும் இதை தேசிய அளவில் அண்ணாஹசாரே குழுவினர் கையில் எடுத்தபிறகு தான் மக்கள் மத்தியில் இதற்கோர் பெரும் விழிப்புணர்வு தோன்றியுள்ளது. இந்த மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்த கடந்த ஒராண்டாக மத்திய அரசு முயற்சிக்கறது என்ற போதிலும் ஊழலை ஒரளவேணும் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு மத்திய அரசு ஆளானது. ஆகவே வீரியமில்லாத ஒரு லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனபோதிலும் அதனை இன்னும் ராஜ்யசபாவில் நிறைவேற்றமுடியவில்லை. காரணம் பெரும்பாலான அரசியல்கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் லோக்பால் மசோதா வருவது குறித்து உள்ளுர அச்சம் கொண்டுள்ளனர். இதனால் தான் மாநிலங்களில் லோக்ஆயுத்தாவிற்கும் வழியில்லை.

எனவே லோக்பால் மசோதாவை காலதாமதப்படுத்துவது, நீர்த்துப்போகச் செய்வது, அண்ணாஹாசரே குழுவினரை அவதூறுபேசுவது, போராட்டத்தின் மீதான அவநம்பிக்கைகளை தோற்றுவிப்பது...என எதிர்வினை ஆற்றுகின்றனர் அரசியல்வாதிகள்!

அதேசமயம் இந்த மக்கள் எழுச்சியின் விளைவால் ஊழல்வாதிகளுக்கு சில உதறல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.
2ஜி அலைக்கற்றை ஊழல், காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் ஊழல் அதிர்ஷ் வீட்டுவசதிவாரிய ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஊழல் ஆதர்ஷ் வீட்டுவசதிவாரிய ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் போன்ற ஊழல்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான உணர்வுகளை ஒருமுகப்படுத்தி அதை மக்கள் போராட்டமாக வலைமைத்துள்ளனர். அண்ணாஹசாரே குழுவினர்.

இதனால் தான் அரசியல்வாதிகள் அண்ணாஹசாரே குழுவினரை தேசவிரோதிகள் என்றும் சதிகாரர்கள் என்றும், பா.ஜ.கவின் ஆதரவாளர்கள் என்றும் வெளிநாட்டுசதி இதில் இருக்கிறது என்றும் வசைமாரி பொழிந்தனர்.
ஆனாலும் அண்ணா குழுவினர் பின்வாங்கவில்லை. தற்போதைய மத்திய அமைச்சர்கள் 15பேரை பட்டியலிட்டு என்னென்ன ஊழல்களில் சம்மந்தப்பட்டுள்ளன. என அம்பலப்படுத்தினர். மக்களை மற்றும் மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள ஊழல் மற்றும் குற்ற பின்னண கொண்டவர்களின் பட்டியலை வெளியிட்டனர். அதோடு ஊழல் அமைச்சர்களை விசாரிக்க சிறப்புவிசாரனை குழு, எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க விரைவுகோடுகள், வலுவான லோக்பால் மசோதா போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது உண்ணாவிரதம் ஆரம்பித்துவிட்டனர்.

அண்ணாஹசாரே குழு தலைமையிலான போராட்டத்தின் மீது நமக்கு பல விமர்சனங்கள் இருக்கலாம், அதில் சில பலஹீனங்கள் இருக்கலாம், போதாமைகள் இருக்கலாம்.... ஆனாலும் அவர்கள் தங்களுக்காக போராடவில்லை மக்கள் நலனுக்காக போராடுகின்றனர். இன்றைய அவசர, அவசிய தேவைகளை உள்ளடக்கியது அவர்கள் போராட்டம்.!

இதற்கு முன் இது போன்ற சில சமூக ஆர்வலர்கள் போராடியதன் விளைவாகத் தான் தகவல்அறியும் உரிமைசட்டம், தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம்.... போன்றவை மக்களுக்கு கிடைத்துள்ளன. அந்த வகையில் ஆணையம்...போன்றவை மக்களுக்கு கிடைத்துள்ளன. அந்த வகையில் தற்போது நமது பிரதமர் அமைச்சகமே தந்துள்ள தகவல்படி தற்போது ஊழலுக்கு எதிராக வழக்கு தொடர விரைந்து அனுமதி வழங்கும் ஆணை, மிகப்பெரிய பொறுப்பிலுள்ள அதிகாரிகள் மீதான புகார்களை போலீசார் விசாரிக்கும் அதிகாரம், மந்திரிகளுக்கான சிறப்பு ஒதுக்கீடுகளை ரத்து செய்யும் முயற்சி... போன்றவை அண்ணாகுழு போராட்டம் தந்த அழத்தத்தின் விளைவுகள் தானே!
எனவே எந்த ஒரு நல்நோக்கத்திற்கும், போராட்டத்திற்கும் ஓரளவேணும் பயன்கள் கிடைக்காமல் போகாது. எனவே ஆன்மபலம் உள்ள அனைவரும் அவரவர் பங்களிப்பை தர முன்வருவோமாக!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
25-7- 2012

No comments: