Friday, September 7, 2012

அண்ணாஹசாரேவின் அரசியல் பிரவேசம்

 
-சாவித்திரிகண்ணன்
 
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நான்காவது முறையாக உண்ணாவிரதம் தொடங்கிய அண்ணாஹசாரே குழுவினர் ஒன்பதாவது நாளில் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துள்ளனர். இம்முறை இனி அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு சிலருக்கு ஆனந்தத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் அவரது எதிர்ப்பாளர்கள் மத்தியில் ஏளனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா குழுவிலிருந்தே சுவாமி அக்னிவேஸ் போன்றோரின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
ஊழல் என்ற ஒரே ஒரு ஒற்றைக் காரணத்தை மட்டுமே எதிர்வினைப் படுத்தி இயங்கி வந்த ஒரு இயக்கம் - இன்று அனைத்தையும் தன்னுள் அடக்கிய அரசியல் என்ற மாபெரும் அரங்கத்திற்குள் பிரவேசிக்கப் போகிறோம் என்ற அறிவிப்பை அதிரடியாக உண்ணாவிரத மேடையில் அறிவித்துள்ளது.
 
எனவே இந்த முடிவு அக்குழுவிற்குள் பரந்து பட்டு விவாதிக்காமல், ஆழ்ந்து பரிசிலனை செய்யப்படாமல், ஒரு மித்த கருத்தை எட்டாமல் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை எவரும் உணரமுடியும். இதனால் தான் உயர்மட்ட குழுவிற்குள்ளும், கீழ் அமைப்பின் உறுப்பினர்களிடையேயும் பல தரப்பட்ட அபிப்பிராயபேதங்கள் தோன்றியுள்ளன.
 
மகாத்மாகாந்தி காங்கிரஸிற்கு தலைமை ஏற்பதற்கு முன்பு தன்னை ஒரு மக்கள் தொண்டனாக பாவித்து இந்தியாவின் முலைமுடுக்கெல்லாம் பயணப்பட்டு பலதரப்பட்ட மக்களை பாரத்துப் பேசி இந்திய மக்களை மிக ஆழமாகப் புரிந்து கொணடார்.
 
பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதிநித்துவம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிஸை, அரசியல் அதிகாரத்தலிருந்தே அந்நியப்படுத்தி தீண்டாமை ஒழிப்பு, ஹரிஹனசேவை, கிராமபுற நிர்மாணத்திட்டம் ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமை... போன்ற பலதரப்பட்ட களப்பணிகளில் ஈடுபடவைத்தார் - காந்தி!
 
இப்படியாக பிரிட்டிஷ் அரசில் பிரதிநிதித்துவம் பெறுவதற்காகவே தோன்றிய ஒரு கட்சியின் அடையாளத்தையே மாற்றினார். அதே சமயம் எந்த கட்சியில் இருப்பவர்களும் காங்கிரஸுக்குள் வந்து பணியாற்றத் தடையில்லை என்ற ஜனநாயகத்தையும் ஏற்படுத்தினார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காங்கிரசே நேரடி அரசியலில் ஈடுபட காந்தி அனுமதி தந்தார்.
 
இது வரை 'ஊழல் எதிர்ப்பு' என்ற உன்னத நோக்கத்திற்கானவர் என்ற வகையில் மட்டுமே பார்ககப்பட்ட அன்னாஹாசேரே, அரசியல் களத்தில் குதிக்குமளவுக்கு தன்னையோ, தன் இயக்கத்தையோ தகுதிபடுத்திக் கொண்டாரா என்றால் ' இல்லை' என்பதே எவரும் கூறும் பதில்!
 
டெல்லி, மும்பை, சென்னை போன்ற மாநகரங்களின் படித்த ஒரு சில மக்களிடம் மட்டுமே அவரது இயக்கம் அறிமுகம் கொண்டுள்ளது. இது பரந்தபட்ட இயக்கமாகவோ, பாமரர்கள் பங்கெடுத்த இயக்கமாகவோ வளர்க்கப்படவில்லை. அன்னாவோ அவரது குழுவினரோ பெருநகரங்களைத் தவிர்த்து சிறுநகரங்களுக்கே சிற்றூர்கள், கிராமங்களுக்கோ சென்று மக்களிடம் தங்களை தொடர்புபடுத்தி கொள்ளவில்லை.
 
அதோடு ஊழலுக்கு அப்பால் இந்தியாவை அலைகழிக்கும் ஜாதி, மததுவேஷங்கள் மதுகொடுமைகள், மக்களை கொள்ளையிடும் வர்த்தக போக்குகள், விவசாயிகளின் பிரச்சினை, அடிப்படை வாழ்வாதாரங்களுக்காக மக்கள் நடத்திய போராட்டங்கள், வறுமை, வேலையின்மை... போன்ற எந்த ஒரு சமூக பிரச்சினையிலும் தங்களை ஈடுபடுத்தவில்லை. இவை குறித்து இவர்கள் கொண்டுள்ள கருத்து நிலைபாட்டையும் வெளிப்படுத்தியதில்லை.
 
காந்திய அரசியல் இயக்கத்திற்கான அடிப்படை பண்பு சில உள்ளன.
  • அது எந்த ஒரு அரசியல்கட்சியையோ தனிநபர்களையோ எதிரியாக பாவிக்காது. துவேஷமாகவோ, வெறுப்பாகவோ பேசாது! எல்லா தனிநபர்களுக்குள்ளும்,
  • எல்லா அரசியல் இயக்கங்களுக்குள்ளும் தன் செயல்பாடுகளால் தொடர்ந்து நல்அதிர்வுகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்திய வண்ணமிருக்கும். இந்த நோக்கங்களுக்கு மாறானவர்களிடம் கூட ஒரு போதும் துவேஷம் பாராட்டாது. அதோடு பாமராக்களிடம் ஏழை எளியோரிடம் உறுதியான பிணைப்பை கொண்டிருக்கும்.
  • எத்தகைய எதிர்ப்பையும், அவமானத்தையும், துன்பத்தையும் இன்முகத்துடன் ஏற்கும். அன்னா குழுவினர் தங்களை சுயபரிசோதனைக் காப்படுத்திக் கொள்ளட்டும்.
எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.
  NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Aug

No comments: